திங்கள், 6 மே, 2013

பெண்ணை படுமோசமாக intimidate செய்யும் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜீ டிவியில் சொல்வதெலாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் ( may 06 2013 ) இன்று
பார்த்த  ஒரு
மோசமான கட்டை பஞ்சாயத்து கண்டிப்பாக விமர்சிக்க படவேண்டி உள்ளது,
பெண் அடிமை தனம் பெண்களிடமே மிக மிக அதிகமாக இருக்கிறது என்பதற்கு மிக சரியான உதாரணமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்தது .
லட்சுமி ராமகிருஷ்ணன் என்ற பெண்மணி ஒரு குடிகார உதவாக்கரை சைக்கோ கணவனுக்காக ஒரு பெண்ணிடம் வற்புறுத்திய பலாத்காரம் இருக்கிறதே . போலீஸ் ஸ்டேஷன் பிச்சை வாங்கணும் .
அந்த பெண் எதோ தையல் வேலைக்கு போய் தன்னையும் தனது மகளையும் பாதுகாத்து கொண்டு மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகிறாள்.
குடிகார பொறுக்கி கணவனோ ஒரு நாளும் நல்ல ஒரு கணவனாக இருந்திருக்கவே மாட்டான் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது .
அவன் போதையில் பலதடவை தற்கொலை முயற்சி வேறு செய்திருக்கிறான் .அவனுக்கு குடியின் தாக்கத்தால் ஒரு கையும் காலும் வழங்காமல் போய் தற்போது ஓரளவு சுகம் , அதற்குள் குடித்து விட்டு மீண்டும் தன்னை தானே கத்தியால் கீறி பார்க்கவே பயமாக இருக்கிறது ,
மனைவியை வேறு கொல்லுவேன் சிலிண்டரை திறந்து விடுவேன் என்றெல்லாம் பயமுறுத்துகிறான்
அந்த பெண்ணோ அய்யா சாமி உன் சங்காத்தமே வேண்டாம் நான் என் குழந்தையை காப்பாத்த வேணும் என்று தன்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சுகிறாள் .
இந்த லட்சுமி ராமகிரிஷ்ணன் என்ற பெண்மணியோ  இல்லை அவன் தற்போது திருந்தி விட்டதாக கூறுகிறான் அவனை நீதான் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று மிரட்டுகிறார், ஆமாம் படு மோசமாக மிரட்டுகிறார்
போதாதற்கு அவளுக்கு வேறு எதோ ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா என்று அறிவதில் கடும் பிரயத்தனம் செய்கிறார் ,
எடுத்துக்கொண்ட விடயத்திற்கு அவசியமா என்பதை விட  லட்சுமி  ராம கிரிஷ்ணனுக்குஅவர்களின் அந்தரங்க விடயங்களை  அறிவதில் பயங்கர த்ரில்,
பரவாயில்லை சொல்லுங்க அம்மா என்று நாவில் இனிப்புடன்  கேட்பார்
பொதுவாக ஆண் பெண்களின் கள்ள தொடர்பு போன்ற விடயங்களை அறிவதில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அதீத ஆர்வம் இருப்பது எல்லோரும் அறிந்ததே , இது ஒரு மன நோய் ,

நிறைவேறாத ஆசைகள் அதிகம் இருப்பவர்கள் இந்த மாதிரி சமாச்சாரங்களில் தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று தங்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வது வழக்கம் தான்< அந்த  பெண்ணை படுமோசமாக  intimidate செய்ய இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது , பெண் அடிமை தனத்திற்கு சப்போர்ட் பண்ணுவதன் மூலம் ஆணாதிக்க வாதிகளின் good book இல் இருக்க ஆசைப்படுகிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக