செவ்வாய், 7 மே, 2013

சி.பி.ஐ., இயக்குனர்: விசாரணை அறிக்கையை அமைச்சர் திருத்தியது உண்மையே

புதுடில்லி: "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து, சி.பி.ஐ., தயாரித்த விசாரணை
எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி
தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், பெரும் முறைகேடு நடந்தததாக, புகார் எழுந்ததை அடுத்து, இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ., விசாரணையில், மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் தலையிட்டதாகவும், விசாரணை அறிக்கையில், திருத்தம் செய்ததாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா, கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "சி.பி.ஐ., விசாரணையின் வரைவு அறிக்கையை, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகளிடம் காட்டியது உண்மையே' என, தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இது தொடர்பாக, புதிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், சி.பி.ஐ., சார்பில், அதன் இயக்குனர், ரஞ்சித் சின்கா, ஒன்பது பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை, நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கூட்டாக சேர்ந்து திருத்தம்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணை குறித்து, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், வாகன்வதி, அப்போதைய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஹரீன் ராவல், பிரதமர் அலுவலக கூடுதல் செயலர் சத்ருக்ன சிங், நிலக்கரி அமைச்சக கூடுதல் செயலர் ஏ.கே.பல்லா ஆகியோரை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப, விசாரணை அதிகாரிகள், சந்தித்து பேசினர்.
அப்போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து விசாரணை அறிக்கை, அவர்களிடம் காட்டப்பட்டது. சட்ட அமைச்சரும், அட்டர்னி ஜெனரலும், சில திருத்தங்களை மேற்கொள்ளும்படி கூறினர். ஆனால், விசாரணை அறிக்கையை, முழுவதுமாகவோ, முக்கிய சாரம்சத்தையோ, மாற்றும்படி, அவர்கள் கூறவில்லை. சி.பி.ஐ.,யும், அதுபோன்ற
மாற்றங்கள், திருத்தங்கள் எதையும் செய்யவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களையோ, சந்தேகத்திற்கிடமானவர்களின் பெயர்களையோ, அறிக்கையிலிருந்து நீக்கவில்லை. பெரும்பாலான மாற்றங்கள், அட்டர்னி ஜெனரல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சட்ட அமைச்சர், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைப்படியே செய்யப்பட்டன.
ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், சுரங்கங்களில் என்னென்ன பணிகளை மேற்கொண்டுள்ளன என்பதற்கான மதிப்பீடு விவரங்களை, அறிக்கையி லிருந்து நீக்கும்படி, பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, அந்த விவரங்கள் நீக்கப்பட்டன.
சுரங்க ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் பணிகள் குறித்து, ஆய்வுக் குழு தெரிவித்திருந்த சில விவரங்களும், சட்ட அமைச்சரால் நீக்கப்பட்டன. ஆனாலும், யார், யார், எந்தெந்த திருத்தங்களை செய்தனர் என்பதை, குறிப்பாக கூறுவது, கடினம்.
சட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செய்த, இந்த திருத்தங்களை, சி.பி.ஐ., ஏற்றது. விசாரணை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் நீக்கங்களுக்காக, சுப்ரீம் கோர்ட்டிடம், சி.பி.ஐ., மன்னிப்பு கேட்கிறது.
இந்த விவகாரத்தில், சி.பி.ஐ.,க்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த விசாரணை, எந்தவித குறுக்கீடும் இல்லாமல், சுதந்திரமாக நடக்கும் என, உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு, சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த நெருக்கடி
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர், அஸ்வனி குமார் ஆகியோருக்கு, ஏற்கனவே கடும் நெருக்கடி ஏற்பட்டு இள்ள நிலையில், சி.பி.ஐ., நேற்று தாக்கல் செய்த அறிக்கையால், நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. dinamalar.com

அறிக்கையில், மத்திய சட்ட அமைச்சர், அட்டர்னி ஜெனரல், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகள், திருத்தம் செய்தது உண்மையே' என, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., ஒப்புக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக