வெள்ளி, 17 மே, 2013

ஜாதிவெறியர்கள் கவனத்திற்கு! பேஸ்புக்கை அவமதிக்க வேண்டாம்! Facebook கிற்கு பரம்பரை ஒன்றும் இல்லை

ஜாதிவெறியில் திளைத்து, ஜாதி மறுப்புத் திருமணம் வேண்டாம்; காதல் திருமணம் கூடாது என்று முகநூலில் (Facebook) கருத்துக்களை வெளியிடும் அன்பர்களுக்கு சில செய்திகள் பகிர விரும்புகிறோம்.இன்று பேஸ்புக் உரிமையாளரும் அதை உருவாக்கியவருமான மார்க் எல்லேய்ட் ஜுக்கர்பெர்க் -இன் பிறந்த நாள். மார்க் எல்லேய்ட் மே 14 1984 ஆண்டு பிறந்தார்.அமெரிக்கரான இவர், வியட்னாம் நாட்டிலிருந்து தனது தாய் தந்தையை இழந்து சீனத்தம்பதிகளின் அரவணைப்பில் அகதியாக அமெரிக்கா வந்து குடியேறிய பிரிஸ்கில்லா சான் என்ற 18 வயது பெண்ணை காதலித்து மணந்தவர். சான் என்பது அவரை வளர்த்த சீன தம்பதியினரின் குடும்பப்பெயர், பிரிஸ்கில்லா என்பது அவர் படித்த பாடசாலையில் வைத்தபெயர்.திருமணத்திற்கு பிறகு மருத்துவம் படித்து அகதிகளுக்கு சேவை செய்யவிருக்கிறார் சான். மார்க், பிரிஸ்கில்லா இருவருமே மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, ஒரு அகதியாக வளர்ந்து, நாடு விட்டு நாடு வந்த பெண்ணைத் திருமணம் செய்யும் மார்க், தற்போது நெம்பர் 1 இளம் பணக்காரர். மேலும் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர்.அவர் உருவாக்கிய முகநூலில் ஜாதிவெறி, மதவெறியைப் பரப்பி இத்தம்பதிகளை இழிவுபடுத்த வேண்டாம் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த வேற்று நாடு, இனம், மதம், மொழியைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்யும் 29 வயதே ஆன மார்க் எங்கே? நாங்கள் ஆண்ட பரம்பரை, அந்தப் பரம்பரை, ஆதிக்க ஜாதி, மேல் ஜாதி என்று கொலைவெறியில் திரியும் இவர்கள் எங்கே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக