மாவோயிஸ்டுகளிடமிருந்து வி.சி.சுக்லாவை காப்பாற்ற
முயற்சித்து இயலாமல் போனதால் மனமுடைந்த அவரது பாதுகாவலர் ப்டிரபுல் சுக்லா
தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய
வந்துள்ளது. காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, சத்தீஸ்கர்
மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா,
சத்தீஸ்கர் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திரகர்மா ஆகியோர் காரில்
சென்று கொண்டிருந்தனர்.
சுக்மா மாவட்டம், தர்பாகாட் என்ற இடத்தில், கார் கடந்த போது, திடீரென மாவோயிஸ்ட்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தில், மகேந்திரகர்மா, முன்னாள் எம்.எல்.ஏ., உதயா முதலியார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வி.சி.சுக்லா, மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். அத்தோடு, மாநில காங்கிரஸ் தலைவர் நந்த குமார் படேல் மற்றும் அவரது மகன் உமேஷ் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர், மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகள் தாக்கத் தொடங்கியதும், ப்டிரபுல் பதுங்கியிருந்து எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளார். காரின் கதவினை பாதுகாப்பு கேடயமாக ஏந்தி, தன்னுடய 9 எம்.எம் துப்பாக்கி மூலம் மாவோயிஸ்டுகளை திருப்பி சுட்டுள்ளார்.
தனது துப்பாக்கியின் குண்டுகள் தீர்ந்து விடப் போகின்றன என்பதை தெரிந்து கொண்ட ப்டிரபுல், வி.சி.சுக்லாவைப் பார்த்து, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என்னால் உங்களைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது என கூறிக் கொண்டே தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாவோயிஸ்ட் தாக்குதல் சம்பவத்தில், 4 குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லாவின் பாதுகாப்பு அதிகாரியான ப்டிரபல்லின் இறுதிச்சடங்குகள் ராய்ப்பூரில் நடை பெற்றது. 40 வயதான ப்டிரபல் கடந்த எட்டு ஆண்டுகளாக காங்கிரஸில் உள்ளார். அவருக்கு ஒரு மனைவியும் 4 மற்றும் 8 வகுப்புகள் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வி.சி.சுக்லா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் பிரவலங்கள் சுக்லாவை நலம் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக