புதன், 29 மே, 2013

ராம்ஜெத்மலானி :நான் துவக்கிய கருப்பு பண பிரசாரம் BJPயை தலைகுனிய வைத்திருக்கிறது

புதுடில்லி:பா.ஜ.,வில் சில விரும்பத்தகாத சக்திகள் உள்ளதாகவும் அவர்களை
இந்நிலையில் இதுகுறித்து ராம்ஜெத்மலானி கூறுகையில்,
விரும்பத்தகாத சக்திகள்:பாரதீய ஜனதா கட்சியில் சமூக விரோதிகளிடம் உள்ள கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் உள்ளன.இவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம்.
நான் ஓயமாட்டேன்:விரும்பத்தகாத சக்திகளை வெளிக்காட்டும் வரை நான் ஓயமாட்டேன். நான் துவக்கிய கருப்பு பண விவகார பிரசாரம் அவர்களை தலைகுனிய வைத்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வரக்கோரி காங்கிரசுக்கு எதிரான எனது கோரிக்கைகளுக்கு கட்சியிலே ஆதரவு இல்லை.
இந்த நிலையில் மேலும் என் மீது எடுத்துள்ள இந்த முட்டாள் தனமான நடவடிக்கையால் பாரதீய ஜனதா அழிவுப்பாதையை நோக்கி சென்று வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த முட்டாள்தனமான நடவடிக்கையால் அவர்கள் வரும் லோக்சபா தேர்தலில் லட்சக்கணக்கான ஓட்டுக்களை இழந்து தோல்வியை நோக்கி ‌போகப்‌போகிறார்கள் என்றார்.dinamalar.com
வெளிகாட்ட உள்‌ளதாகவும் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார். முன்னதாக பா.ஜ.,கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அதன் தலைமையை விமர்சனம் செய்ததற்காக மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.,எம்பியுமான ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக