நடிகை நீபாவுக்கும் தொழிலதிபர் சிவகுமாருக்கும் இன்று திருமணம்
நடந்தது.
‘காவலன்', ‘பெருசு', ‘பள்ளிக்கூடம்', ‘தோட்டா', ‘கண்ணும் கண்ணும்',
‘அம்முவாகிய நான்' உள்பட பல படங்களில் நடித்தவர் நீபா. சின்னத்திரை
தொடர்களிலும் ‘மானாட மயிலாட' நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்.
இவரது அம்மா மாலினி அப்பா வாமனும் நடன அமைப்பாளர்களாக உள்ளனர். மாலினி பல
படங்களில் நடித்துள்ளார்.
நீபாவுக்கும் வேலூரைச் சேர்ந்த கட்டுமான தொழில் அதிபர் சிவக்குமாருக்கும்
திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நீபா-சிவக்குமார் திருமணம் சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஸ்ரீலட்சுமி
பிரசன்னா மகாலில் இன்று (புதன்கிழமை) காலை நடந்தது. திரையுலகினர் ஏராளமாகக்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு அதே மண்டபத்தில்
நடக்கிறது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக