வெள்ளி, 31 மே, 2013

போங்கடி நீங்களும் உங்க காதலும்

சென்னை: காதல் மோசடி பற்றிய கதையாக உருவாகிறது ‘போங்கடி
நீங்களும் உங்க காதலும்‘. இதுபற்றி இயக்குனரும், ஹீரோவுமான ராமகிருஷ்ணன் கூறியதாவது: கம்ப்யூட்டர் யுகத்தில் உலகம் சுருங்கிவிட்டது. எந்த நாட்டிலோ இருக்கும் பெண் வேறு எந்த நாட்டிலோ இருக்கும் வாலிபனை காதலிக்கிறார். எது காதல், எது நட்பு, அதற்கான எல்லை என்ன என்பதை கணிக்க முடியாத அளவுக்கு குழப்பம் மேலோங்கி இருக்கிறது. காதல் என்ற பெயரில் எத்தனையோ பெண்கள் ஆண்களை ஏமாற்றுகிறார்கள். அதுபோல் எவ்வளவோ பெண்களை வாலிபர்கள் ஏமாற்றுகிறார்கள். இருவரின் துரோகம் பற்றிய கதையாக இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைந்துள்ளது. ஹீரோவாக நான் நடிக்கிறேன். ‘மனம் கொத்தி பறவை‘ படத்தில் நடித்த ஆத்மியா மற்றும் காருண்யா ஹீரோயின். ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு. கண்ணன் இசை. தயாரிப்பு கே.ஆர்.கண்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக