வெள்ளி, 31 மே, 2013

தயாளு அம்மாள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆசாரக உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க விலக்கு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஜூலை 8-ந் தேதிக்குள் தயாளு ஆஜராகவும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு பணம் கொடுக்கபட்டது என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோர் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இதே வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநர்களில் ஒருவரான தயாளு அம்மாளை சிபிஐ அரசு தரப்பு சாட்சியமாக்கியுள்ளது.

அவரை மே முதல் வாரம் சாட்சியமளிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தயாளு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ நீதிமன்றம், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க தயாளு அம்மாள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் போதுமானவை அல்ல.. அதனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் ஜூலை 8-ந் தேதிக்குள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் தயாளு அம்மாள் டெல்லி சென்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக