வெள்ளி, 31 மே, 2013

நடிகை லீனா மரியாபால் கைது - வாக்குமூலம்

சென்னை வங்கியில் ரூ.19 கோடி மோசடியில் போலீஸ் தேடும் சுகாஷ் சந்திரசேகரின் காதலியும் நடிகையுமான லீனா மரியாபால் டெல்லியில் கைது செய்யப்பட்டு இன்று காலை ரெயிலில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். கமிஷனர் அலுவலகத்தில் அவருக்கு காலையில் இட்லி சாம்பார் வழங்கப்பட்டது. அதன்பிறகு காலை 9 மணிக்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். லீனாவுக்கு ஆங்கிலம், மலையாளம் மட்டுமே தெரியும். அவர் சுகாசுடன் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது பற்றி, ’’கேரளாவில் பிறந்த எனக்கு சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 மலையாளப் படங்களில் நடித்தேன். சுகாஷ் கேரளாவில் தங்கி இருந்தபோது நான் நடித்த மலையாளப் படங்களை பார்த்துவிட்டு என்னை போனில் தொடர்பு கொண்டார். தான் ஒரு சினிமா டைரக்டர் என்று சொல்லி அடிக்கடி என்னிடம் பேசினார்.தமிழ், இந்தியில் சினிமா முன்னணி பிரமுகர்களை தனக்கு தெரியும் என்று கூறினார். அவர்களிடம் எனக்கு சான்ஸ் வாங்கித் தருவதாக கூறினார். அதன்படி சென்னையில் முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவரை சந்தித்தோம்.
அதன்பிறகு மும்பையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல டைரக்டரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். சுகாஷ் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகி காதலித்தேன். அவரைப்பற்றி விசாரித்த போது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் மகள் வழி பேரன் என்றும், அதே குடும்பத்தில் திருமணம் செய்யப்போகிறேன் என்றும் சொன்னார். இதனால் சுகாசுடன் நெருங்கிப்பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டேன்.
ஆனால் திருமணம் செய்ய வில்லை. ஒன்றாக வாழ்ந்து வந்தோம். 6 மாதத்துக்கு முன் டெல்லியில் பண்ணை வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி குடும்பம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து என்னை கைது செய்துவிட்டனர். அவர் சாதுர்யமாக தப்பிச்சென்று விட்டார்’’என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் பேசுவதால் மெதுவாக ஒவ்வொன் றாக சொல்கிறார். இதனால் வாக்கு மூலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக