வெள்ளி, 3 மே, 2013

இம்சை அரசன் புதிய புலிகேசி ராமதாசு! பேருந்துகள் / மக்கள் வரிப்பணம் எரிகிறது

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கைது செய்யப்பட்டதை கண்டித்து,
அக்கட்சியினர் ஆங்காங்கே நடத்தும் வன்முறை சம்பவங்களால், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கலக்கத்தில் உள்ளனர். எந்த நேரத்தில், என்ன பாதிப்பு ஏற்படுமோ என்ற மன உளைச்சலுடன் பணியில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு, பல கோடி  ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகம், இந்த பிரச்னையால் மேலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தனியார் பஸ் உரிமையாளர்கள், இரவில் பஸ்சை எடுத்துச் செல்ல டிரைவர்களுக்கு தடை போட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.) மாநில பொதுச் செயலர் அன்பழகன், “தற்போது நடக்கும் வன்முறை சம்பவங்களால், டிரைவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டால், டிரைவரை பிடித்து நிர்வாகம் கசக்கி பிழிகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். போக்குவரத்து நிர்வாகமும், டிரைவர்கள் மீது தேவையற்ற நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக