வெள்ளி, 17 மே, 2013

மாணவன் தலையை சுவற்றில் முட்டி மாணவன் பலி!ஆசிரியர் கைது

கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனின் தலையை பல முறை சுவற்றில் இடித்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தாவில் ஒரு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் பாப்பி ஜோர்தர் என்னும் 9 வயது சிறுவனை, அப்பள்ளியில் பணிப்புரியும் பெண் ஆசிரியர் ஒருவர் தண்டித்தது விபரீதத்தில் முடிந்துள்ளது.கடந்த புதன்கிழமை அன்று வகுப்பறையில் தனது நண்பனுடன் வாக்குவாதத்தில் ஜோர்தர் ஈடுப்பட்டதை கண்டிப்பதற்காக, அப்பள்ளியில் 4 வருடங்களாக பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், சிறுவனின் தலையை சுவற்றில் பலத்தடவை முட்டியுள்ளார்.இதனால் பலத்த காயமடைந்த அச்சிறுவன் மருத்துவர்களின் பரிந்துரையின்படி, கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அச்சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் மரணத்திற்கு காரணமாக இருந்த பள்ளி ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக