வியாழன், 9 மே, 2013

பாகிஸ்தானியரிடம் 1 கோடி ரூபா இந்திய போலி கரன்சி! தோஹாவில் இருந்து காத்மாண்டு வந்த பயணி

ஒரு கோடி ரூபாய் போலி இந்திய ரூபாய் நோட்டுடன் காத்மாண்டு விமான
நிலையத்தில் வந்திறங்கிய பாகிஸ்தானிய பயணி ஒருவரை நேபாள போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் சட்டவிரோத ‘பணச் சுழர்ச்சி’ (illegal money laundering) செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பணம் இது என ஊகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யால் இப்படியான மறைமுக காரியம் ஒன்று செய்யப்படுவதாக முன்னரே தெரியவந்திருந்தது. இந்திய பொருளாதாரத்தை வீழ்த்துவதற்காக செய்யப்படும் நடவடிக்கை இது எனவும் அறியப்படிருந்தது. இதற்கு முன் கடந்த மாதம் 15-ம் தேதி, இதே நேபாளம் காத்மாண்டு விமான நிலையத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தாய் மற்றும் மகனிடமிருந்து, 47 லட்ச ரூபாய் இந்திய போலி கரன்சியை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். லேட்டஸ்டாக நேற்று முன்தினம் காத்மாண்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷேக் முகமது பாக்ரன் என்ற 48 வயதான நபரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய கரன்சியை மறைத்து வைத்திருந்தார். இவர் தோஹாவில் இருந்து பயணம் செய்திருந்தார். ஷேக் முகமதுவும், அவருடன் வந்த நேபாள நாட்டவர் நூருல்லாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.>viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக