புதன், 24 ஏப்ரல், 2013

chennai மாநகர ஆட்சி அறிவிக்கப்பட்ட 215 திட்டங்கள் பல தொடங்கப்படவேயில்லை

அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டு: கலைஞர் குற்றச்சாட்டு அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவில்லை என திமுக தலைவர் கலைஞர் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின்படி சென்னை மாநகராட்சியில் 2012-13-ம் ஆண்டில் வார்டு கவுன்சிலர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான பணிகள் முடிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டில் திட்டமிடப்பட்ட 640 பணிகளில் 617-க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதில் 597 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டன. 397 பணிகளுக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டு அதில் 77 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 215 பணிகள் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் 2013-14-ம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி உறுப்பினர் தாக்கியதால் சுகாதார அதிகாரி ஒருவர் பதவி விலகியதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி பல நாள்கள் ஆகியும் அரசு தரப்பிலோ, மாநகராட்சி தரப்பிலோ இதுவரை மறுப்பு வந்ததாகத் தெரியவில்லை.
மத்திய அரசின் வெளி மார்க்கெட் விற்பனைப் பிரிவில் இருந்து கிலோ ரூ. 19-க்கு அரிசியை கொள்முதல் செய்து ரூ. 20-க்கு விற்பனை செய்து வருகிறார்கள். தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த மரகத லிங்கங்கள் கொள்ளை போனதாக வந்துள்ள செய்திகள், அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். கும்பகோணம், விழுப்புரம், மதுரை நகரங்களை தலைமையிடமாகக் கொண்டுள்ள போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வந்த நிர்வாக இயக்குநர்கள் கடந்த மார்ச் 31-ம் தேதி ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால் புதிய இயக்குநர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக