திங்கள், 22 ஏப்ரல், 2013

பாமக விழாவில் அகிலேஷ் யாதவ்! ராமதாஸ், அன்புமணி வரவேற்பு!

சென்னை மகாபலிபுரத்தில் வன்னியர்கள் கூடும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழன்) நடக்கிறது. ஜெ.குரு எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் உத்திரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ்சிங் யாதவ் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் அவரது வருகையில் மாற்றம் செய்யப்பட்டது. முன் கூட்டியே அதாவது இன்று (22-ந்தேதி) சென்னை வந்தார்.
காலை 9 மணியளவில் சென்னை வந்த அகிலேஷ் சிங் யாதவுக்கு விமான நிலையத்தில் பா.ம.க. சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் நேராக தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சிக்கு ஜெ.குரு தலைமை தாங்குகினார். பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, துணை பொது செயலாளர் ஏ.கே. மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி ரா.வேலு, சமூக முன்னேற்ற சங்க தலைவர் கோபால், சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் இளங்கோ யாதவ் ஆகியோர் பேசினார்கள்.

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக