திங்கள், 22 ஏப்ரல், 2013

புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம்


 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், நேசனல் புக் டிரஸ்ட் இந்தியாவும் இணைந்து, புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் 21.4.2013 காலை 7 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

உழைப்பாளர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்ற நடைப்பயணத்தை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சென்னை புத்தகச் சங்கமம் நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் சென்னை புத்தகச் சங்கமத்தின் மாபெரும் புத்தகக் கண்காட்சியையொட்டி இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக