செவ்வாய், 30 ஏப்ரல், 2013

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு: சேதுசமுத்திர திட்டத்தை ரத்துசெய்க ! எங்கே போனார்கள் வைகோநெடுமாசீமாபாண்டி


புதுடில்லி: சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தெரிவித்தது.சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள், எச்.எல்.டாட்டூ, ஜெ.எஸ்.கேஹர் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலர், ஷீலா பாலகிருஷ்ணன், 11 பக்க, பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:சேது சமுத்திர திட்டம் குறித்து ஆய்வு செய்த பச்சோரி கமிட்டி, "இந்த திட்டம், பொருளாதார ரீதியாகவும், சுற்றுச் சூழல் ரீதியாகவும், சாத்தியமற்ற ஒன்று' என, தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை, மாற்றுப் பாதையில் செயல்படுத்தினாலும், எந்த பயனும் இல்லை என்றும், கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில், மிகவும் பிரபலமான, விஞ்ஞானியின் ஆய்வு அறிக்கையை, மத்திய அரசு ஏற்க வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தினால், அந்த பகுதியில் மீன் பிடி தொழிலை நம்பி வாழும், மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் அபாயம் ஏற்படும்.சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்து விட்டு, ராமர் பாலத்தை, தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணையை, வரும், ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக