வெள்ளி, 19 ஏப்ரல், 2013

கலைஞர்: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?

பாராளுமன்ற கூட்டு குழுவில் நேரடி விளக்கம் தர ராசா அனுமதி கேட்டார் ஆனால் அது மறுக்கப்பட்டது, அதன் தலைவர் சாக்கோ (மலையாளி) ராசாவை சந்திக்க மறுத்ததன் மூலம் அவர்கள் இந்த விதமான தீர்ப்புக்களை தான் வெளியிடப்போகிறார்கள் என்பது சிறு பாப்பாவுக்கு கூட தெரியுமே
அமைச்சர் ஒருவர் பிரதமரை எப்படி தவறாக வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.
திமுக தலைவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு கொடுத்துள்ள வரைவு அறிக்கையில், பிரதமரை மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராஜா தவறாக வழி நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கலைஞர்: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?
கேள்வி: ஆ. ராஜா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்த பிறகு இதைப்பற்றி அவருக்கு ஆலோசனை கூறுவீர்களா?
கலைஞர்: அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்குத் தெரியாத ஆலோசனைகளை நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சரியான வழியில் நீதி வழங்கப்பட வேண்டும், முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை “சிலப்பதிகாரக்” காலத்திலிருந்து தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
கேள்வி: கூட்டுறவு தேர்தல்களை நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டியிட்டு இப்போது மார்க்சிஸ்ட் கட்சி போன்றவை அந்தத் தேர்தல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?
கலைஞர்: நாங்கள் முன்பே கூட்டுறவுத் தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பதை உணர்ந்து, கூட்டுறவுத் தேர்தல்களை புறக்கணித்து விட்டோம். மற்றக் கட்சிக்காரர்கள் இப்போது உண்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்து, போராட்டங்களை நடத்துகிறார்கள் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக