வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தூத்துக்குடியில் மனைவிக்கு மொட்டை போட்டு அறையில் பூட்டி வைத்த கணவன்

தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்தவர் மணவாளன் ஏஞ்சலா ஜூடு
(30). இவர் அங்குள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைன் மூலம் பெண் தேடினர். 2 ஆண்டுக்கு முன் மதுரையைச் சேர்ந்த அனிதா ஜெயராணி (27) என்பவர் ஆன்லைனில் அறிமுகமானதைத் தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி திருணம் செய்து வைத்தனர்.மணவாளன், பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். திருமணத்தின்போது, தான் டிகிரி முடித்திருப்பதாக பெண் வீட்டாரிடம் மணவாளன் தெரிவித்திருந்தாராம். ஆனால் திருமணத்திற்கு பின் அவர் 10ம் வகுப்பு வரைதான் படித்திருப்பது தெரியவந்ததும்
கணவன்&மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அனிதா ஜெயராணிக்கு 2 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 3ம் தேதி அதே பகுதியில் தனி வீடு எடுத்து கணவன்&மனைவி வசித்தனர். அனிதா பெற்றெடுத்த குழந்தை தனக்கு பிறந்தது இல்லை என மணவாளன் சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். சந்தேகத்தின் உச்ச கட்டமாக அனிதாவுக்கு மொட்டை அடித்து அவரையும் குழந்தையையும் தனி அறையில் அடைத்து வைத்தார். 10 நாட்களாக இந்த சித்ரவதை தொடர்ந்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை குழந்தையுடன் அங்கிருந்து தப்பிய அனிதா சிப்காட் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். கணவர் மணவாளன், மாமியார் லட்சுமி, மைத்துனர்கள் மைக்கேல்ராஜ், மரிய ஜோசப்ராஜா ஆகிய 4 பேர் சேர்ந்து கொடுமைபடுத்தியதாக கூறினார். எஸ்ஐ ராஜாமணி வழக்கு பதிந்து கணவர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக