திங்கள், 1 ஏப்ரல், 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா


பசங்க, மெரினா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. பசங்க படத்துல நடித்த விமலையும், மெரினா படத்துல நடித்த சிவகார்த்திகேயனையும் மிக்ஸ் பண்ணி கேடி பில்லா கில்லாடி ரங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. கதைனு சொல்லனும்னா அப்படி எதுவும் இல்ல. விமல் (கேடி கேசவன்), சிவகார்த்திகேயன் (பட்டை முருகன்) நல்ல நண்பர்களா இருக்கிறார்.. நட்பு பிரியக்கூடாதுனு என லவ்வே பண்ணாம இருக்கிற அளவுக்கு நண்பர்களா, ஊதாரித்தனமா சுத்துறது தான் இவங்களோட வேலை.


அரசியல்ல குதிச்சு கவுன்சிலராகனும்னு லட்சியத்தோட இருந்தாலும் ஒரு கட்டத்துல காதல் அவங்களுக்குள்ள புகுந்திடுது. ஜெராக்ஸ் கடை வெச்சிருக்க பாப்பா(ரெஜினா) மேல் சிவ கார்த்திகேயனுக்கு காதல் வர, ஹாஸ்பிடல்ல வேலை செய்கிற மித்ரா(பிந்துமாதவி) மேல் விமலுக்கு காதல் வருகிறது. 

நட்புக்காக காதலிக்காம இருந்த நல்ல நண்பர்களுக்கு காதலால் பிரச்சனை வரும்.  கல்யாணம் ஆகியிருந்தாலும் பேச்சுலரா இவங்க கூட வாழ ஆசைப்படுவாரு சூரி . ஒரு கட்டத்துல ரெண்டு ஜோடிக்கும் காதல் செட் ஆகுற சமயத்துல ரெஜினாவோட அப்பா சிவகார்த்திகேயனை அடிக்க, விமலும் பிந்து மாதவிகிட்ட அடிவாங்கிகிட்டு வருவாரு. அவங்க வாங்குன தர்மடியே அவங்க காதல் செட் ஆக வழி செய்ய அடுத்து அரசியலில் குதிக்கிறாங்க. 


போஸ்டர் ஒட்டி, கட்சி மீட்டிங்குக்கு ஆள் சேர்க்கும் வேலைய செஞ்சிட்டு எதிர்கட்சி தலைவர்கிட்ட கவுன்சிலர் வாய்ப்பு கேட்க, அவரை அவமானப்படுத்தி அனுப்புகிறார்..  சங்கு சின்னத்துல சிவகார்த்திகேயன் சுயேட்சையா நின்னு டெபாசிட் கூட இல்லாமல்  தோல்விடைகிறார். எவ்வளவோ அட்வைஸ் கொடுத்தும் திருந்தாத சிவகார்த்திகேயனுக்கு அவர் அப்பா இறந்துபோனபிறகு வாழ்க்கைனா என்ன என்று  புரிய வருகிறது. விமலும் அவர் அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு வெளியே வந்துவிடுகிறார்.


அதன்பிறகு பழைய இரும்பு கடை தொடங்குகிறார்கள். கடை  நல்ல சம்பாதிச்சு அப்பாவிடம் விமல் கொடுக்கிறார். விமல் அப்பா  உணர்ச்சிப்பூர்வமாக பேச  விமல் திருந்திவிடுகிறார்.

பசங்க படம் எடுத்து தேசிய விருது வாங்கிய பாண்டிராஜ் மேல் நல்ல மரியாதை  இருந்துவந்த நிலையில், இந்த படத்தில் பல இடங்களில் சரக்கடிக்கிர மாதிரி சீன் வெச்சிருக்குறதால ஒரு உறுத்தல் இருக்கு. முதல் பாதி ஸ்லோவா இருக்கு.  கதைனு ஒண்ணு இருந்து அதுக்குள்ளவே சுத்தி வராம, நம்ம வாழ்க்கைல நம்மள சுத்தி நடக்குற சாதாரண நிகழ்ச்சிகளை வெச்சு படம் ஃபுல்லா கொண்டு போயிருக்கார் பாண்டிராஜ். ஊதாரித்தனமா சுத்துற பசங்கள அப்பா ஒரே சீன்ல மாத்துற டெக்னிக் பழசுன்னாலும் பெரிய மைனஸா தெரியல.

படம் துவங்கி பெயர் போடும்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என பார்க்காமல் விட்டால் வேறு எந்த இடத்திலும் அதை கண்டுபிடிக்கவே முடியாது. ஆர்ப்பாட்டம், பிரம்மாண்டம் இல்லாத அமைதியான இசை. 


கடைசி வரை சிவகார்த்திகேயன் பட்டையுடனே வருவது சுவாரஸ்யமான, புதிய விஷயம். சிறு வயதில் சைனஸ் பிரச்சனையால் பாதித்த சிவகார்த்திகேயனுக்கு அவரது அம்மா நெற்றியில் திருநீர் பட்டை அடித்து விடுவது நெற்றியில் அப்படியே அச்சாக படிந்துவிடுகிறது. அதனால் சிவகார்த்திகேயன் படம் முழுதும் பட்டையுடனே வலம் வருகிறார். 

ரஜினி ரசிகர்களான பட்டை முருகனும், கேடி கேசவனும் கேடி பில்லா கில்லாடி ரங்காகாவ வலம் வருகின்றனர். சிவகார்த்திகேயனின் மிமிக்ரி திறமை படத்தில் அங்கு அங்கு பளிச் பளிச் என பிரகாசிக்கிறது.

விமல் ஃபாரின் சரக்கு மாதிரி நிதானமா இருக்காரு. சிவா லோக்கல் சரக்கு மாதிரி பட்டைய கெளப்புறாரு. ஹீரோயின்கள் பீர் மாதிரி மைல்டா இருக்காங்க. சைட்-டிஷ் இல்லாத சரக்கா? காமெடி கேரக்டரா சூரி நச்சுனு பொருத்தமா நடிச்சிருக்காரு. தியேட்டருக்கு உள்ள எடுத்துட்டுப் போற பாப்கார்ன் டப்பா, வரும்போது எப்புடி காலியா இருக்குமோ அந்தமாதிரி, படம் பாத்துட்டு வெளிய வரும்போது மனசு ரிலாக்ஸா இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக