திங்கள், 1 ஏப்ரல், 2013

உணர்ச்சிகளை கிளறிவிட்டு ஆதாயம் தேடும் தமிழ் நாட்டு அரசியல்

india todayஸ்ரீலங்காவை பற்றிய எங்கள் வெளிநாட்டுக் கொள்கை இன்று தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை அடிப்படையாக கொண்டதாக இருக்குமானால், நாளை பங்களாதேஷ் பற்றிய வெளிநாட்டுக் கொள்கையை மேற்கு வங்காளம் கட்டளையிடுவதாக மாறிவிடும், மற்றும்  நாளை மறுநாள், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் என்பன நேபாளத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும். எமது உள்நாட்டு அரசியலின் அழுத்தங்கள், மற்றும் உந்துதல்களின் விரிவாக்கத்துக்கு ஏற்றவகையில் எங்கள் உறவுகளை பரிமாற ஆரம்பித்தால் அது மிகவும் தவறான ஒன்றாகும் ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க அனுசரணையிலான தீர்மானத்தின் மீதான எமது நடவடிக்கை,எமது அயலவர் மீதான எங்கள் கொள்கைகள் பற்றிய இசைவிணைவு,  முதிர்வு, மற்றும் நோக்கம் எனபன தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.
எமது ஸ்ரீலங்கா தொடர்பான கொள்கைகள், ஐக்கிய முற்போக்கு முன்னணி(யு.பி.ஏ) அரசாங்கம் மற்றும் தேர்தல் காரணங்களுக்காக இனப்பிரச்சினை விடயத்தில் மிகைப்படுத்தப்பட்ட தோரணையை வெளிப்படுத்தும் திமுக, என்பனவற்றின் அரசியலை விட பரந்தளவிலான அக்கறைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கவேண்டும்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ யை தோற்கடித்துப் பெற்ற தீர்க்கமான இராணுவ வெற்றியின் பின்னர், வெற்றிவிழா மனோநிலையை ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் வீணாக்க இயலவில்லை, எனினும் ஏனைய காரணிகளை புறந்தள்ளி, இந்த வேதனை ஸ்ரீலங்கா பற்றிய எங்கள் கொள்கைகளை ஆட்சி செய்வதை அனுமதிப்பது ஒரு மிகப் பெரிய தவறாகும், விசேடமாக மக்கள் உணர்ச்சிகளை கிளறிவிட்டு ஆதாயம் தேடும் தமிழ் நாட்டு அரசியல் நோக்கர்களின் ஒரு பகுதியினர், மற்றும் வெளிநாட்டிலுள்ள தமிழ் புலம் பெயர் சமூகத்தினர் ஆகியோரின் தூண்டுதல்கள் காரணமாக. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டபோதிலும் இனப்படுகொலை என்றொரு நெகிழ்வான பேச்சு இப்போது தோன்றியுள்ளது.
அப்படியானால் 2009 முதல் இன்றுவரையான காலம் வரையில் தமிழர்கள் ஏன் இதைக் கண்டுபிடிக்கவில்லை? ராஜபக்ஸ அரசாங்கத்தின் வருந்தத்தக்க அரசியல் தோல்வியினை ஏன் இனப்படுகொலை என்று கண்டித்துரைக்கவில்லை?
வெளிநாட்டுக் கொள்கை

வெளிநாட்டுக் கொள்கை என்பது உள்நாட்டு கருத்துக்கள், மற்றும் பிராந்திய உணர்வுகள் என்பனவற்றிலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டது எனக் கருத முடியாது, என்பதில் ஐயத்துக்கு இடமில்லை, எனவே வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்கும்போது அவற்றை அலட்சியப்படுத்திவிட முடியாது. எப்படியாயினும் வெளியுறவுக் கொள்கை செயற்படுவது உள்நாட்டு அரசியலுக்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு சூழலிலேயே, அதன் பங்குகள் வேறுபட்டவை, மூன்றாவது பிரிவினரின் நலன்கள் மற்றும் தொடர்புகள் என்பன ஒரு சிக்கலான காரணி, மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் பூகோள அரசியற் காரணிகள் என்பனவும் இந்த ஆட்டத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. தவிரவும் தேசிய உணர்வுகளை வேறுபடுத்தி பிராந்திய உணர்வுகளுக்கு அதிக அழுத்;தம் கொடுப்பது,கொள்கை வகுப்பில் தனியாக துருத்திக் கொண்டிருக்கும் தன்மையாகத் தோன்றும்.

ஸ்ரீலங்காவை பற்றிய எங்கள் வெளிநாட்டுக் கொள்கை இன்று தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை அடிப்படையாக கொண்டதாக இருக்குமானால், நாளை பங்களாதேஷ் பற்றிய வெளிநாட்டுக் கொள்கையை மேற்கு வங்காளம் கட்டளையிடுவதாக மாறிவிடும், மற்றும்  நாளை மறுநாள், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் என்பன நேபாளத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும். எமது உள்நாட்டு அரசியலின் அழுத்தங்கள், மற்றும் உந்துதல்களின் விரிவாக்கத்துக்கு ஏற்றவகையில் எங்கள் உறவுகளை பரிமாற ஆரம்பித்தால் அது மிகவும் தவறான ஒன்றாகும். எமது அயல்நாடுகள்  சுதந்திரமான, இறையாண்மையுள்ள நாடுகள், நாங்கள் எமது உள்நாட்டு பரப்புரைகளை கட்டுப்படுத்தி, அவை எமது சுற்றாடலிலுள்ள எமது கொள்கைகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு மேலும் இன்று மாநிலங்கள் கூட்டாட்சி முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறி அத்துமீறல் நடத்தும் வேளையில், வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசாங்கத்துக்கு உள்ள சிறப்புரிமைகளுக்கு அவர்களும் மதிப்பு கொடுக்க வேண்டும்.

எங்களைப் போலல்லாமல் ஸ்ரீலங்காமீதான அமெரிக்காவின் பங்கு மிகவும் வரையறைக்கு உட்பட்டது. ஐநா மனித உரிமை பேரவையில் ஸ்ரீலங்காவை கண்டிப்பதற்கான முயற்சிகளை எடுப்பதினால் ஏற்படப் போகும் பின்விளைவுகளை, எங்களைப் போல மிகவும் அவதானத்துடன் கணிப்பீடு செய்யவேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை.அவர்கள் தமது வெளிநாட்டுக் கொள்கையில் மனித உரிமைகளின் பரிமாணங்களை முன்னேற்றுவது, சர்வதேச விவகாரங்களின் தங்களது உயரிய நெறி முறைகளை தக்க வைப்பது, மற்றும் வெளிநாட்டில் தாங்கள் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்படும் மனித விரயங்கள் பற்றி கவனத்தை திசை திருப்புதல், போன்ற பரந்த நோக்கங்களில் தங்களின் மதிப்பை உலகளாவிய தன்மைக்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியே. ஐநா மனித உரிமை பேரவையில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மூலம் ஸ்ரீலங்கா பற்றிய இந்தியாவின் கொள்கையில் ஏற்படப்போகும் அழுத்தங்கள் பற்றியும், அது அங்குள்ள சிக்கலான நிலையை கையாள போதுமான இடத்தை தக்கவைப்பதற்காக, வரையறுக்கப்படாத நிலைக்கு எங்களைத் தள்ளிவிடப் போகிறது என்பதைப் பற்றியெல்லாம் அமெரிக்கா கவனத்தில் கொள்ளாது.

இந்த இடைவெளிக்கு அப்பால் எங்கள் சுற்றாடலில் அமெரிக்காவுடனான எங்கள் மூலோபாயமிக்க உறவுகளை சமாளிப்பதற்காக, 1990 களில் எங்களுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட பிரச்சாரங்களின் உந்துதலினால், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் எங்கள் படைகள் மனித உரிமை மீறல்களை நடத்தியதாக குற்றம்சாட்டி எங்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்த, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை, போன்ற இயக்கங்கள் இன்று, ஸ்ரீலங்காவை இலக்குவைத்துள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறோம்.

கடந்த காலம்

அமெரிக்கா ராஜாங்க திணைக்களம்கூட இதற்கு உடந்தையாக இருந்தது. நாங்கள் இலக்கு வைக்கப்பட்டபோது, நாங்கள் இந்த மனித உரிமை இயக்கங்களின் நோக்கங்களையும் மற்றும் நம்பகத்தன்மையையும் எதிர்த்தோம், இப்போது ஸ்ரீலங்கா அதே படுக்கையில் வீழ்த்தப் பட்டுள்ளபோது, அவர்களின் கண்டுபிடிப்புகளை நாம் உறுதிப்படுத்துகிறோம்.geneva resolution

ஜெனிவாவில் கொண்டுவரப்படும் தனித்தன்மையான மனித உரிமைத் தீர்மானங்களை ஆதரிக்காத நாடு என்கிற எங்கள் கொள்கை சிறப்பானதுதான், ஏனெனில் மேற்கு இந்த தீhமானங்களைப் பயன்படுத்தவது தமக்குப் பாதகமானதாக கருதப்படும் ஆட்சிகளின் சர்வதேச சட்டப+ர்வ தன்மையை அழித்துவிடும் நோக்கிலேயே.சர்வதேச ஒழுங்கினைப் பின்பற்றவதில் அதிக பொறுப்பு வாய்ந்ததும் மற்றும் ஜனநாயகப் பொறுப்புடன் வளர்ந்துவரும் ஒரு சக்தி என்கிற தகுதியோடு உள்ள நாம்,மனித உரிமை விடயங்களில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்காததற்காக விமர்சிக்கப்பட்டுள்ளோம். இரட்டைத் தன்மைகளுடன் விளையாடும் ஒரு சாய்வுக்கு அப்பால், நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்களை கையாள்வதற்கு கண்டிக்கத் தக்கதான வசனங்கள் அடங்கிய பேச்சு வார்த்தைகளுக்கு நாம் ஒப்புதல் வழங்கியுள்ளோம். கடந்த முறை ஸ்ரீலங்காவுக்கு எதிராக நாங்கள் வாக்களித்தபோது, இந்தக் கொள்கையை நாங்கள் தவற விட்டிருந்தோம்,மற்றும் இந்தமுறை திரும்பவும் அதையே செய்திருக்கிறோம்.

பிரேரணை

இந்த முறையும் கூட நாங்கள், ஸ்ரீலங்காவின் இறையாண்மையை  மிகவும் உள்ளுடுருவி குறைத்து மதிப்பிடும்படி, அப்பட்டமாக தாக்கும் வகையில் அமைந்திருந்த அமெரிக்கப் பிரேரணையை மென்மையாக்க ஆரம்பித்தோம். எனினும் அரசாங்கத்தின்மீது விழுந்த திமுகவின் அளவுக்கு மீறிய அழுத்தம் காரணமாக, எங்கள் ராஜதந்திர வியூகம் ஒரு தர்மசங்கடமான முறையில் சீர்குலைக்கப் பட்டது. முதலில் பிரேரணையை மென்மையாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பின்னர், திமுகவை சமாதானப்படுத்தும் இறுதி முயற்சியாக அமெரிக்க பிரேரணையை கடுமையாக்கும்படி நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இதில் மோசமானது என்னவென்றால் அமெரிக்கா இந்தியாவின் செய்கைகளை வரவேற்கவில்லை, ஏனெனில் ஆதரவளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை பாதிக்கப்படும் என்கிற பயத்தில், பிரேரணையின் சமநிலை பாதிக்கப்படுவதை அது விரும்பவில்லை. அமெரிக்கா மிதவாதத்துடன் காணப்படும்போது, நாங்கள் கொள்கை அற்றவர்களாகவும், மற்றும் சந்தர்ப்பவாதிகளாகவும் எங்களைக் காட்டிக் கொள்ளும் ஒரு சூழ்நிலைக்கு எங்களை தள்ளிவிட்டோம்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை நிறைவேற்றத் தவறியதற்காக நாங்கள் ஸ்ரீலங்காவை கண்டிக்கக்கூடாது. ஆனால் இருதரப்பு உறவுகள் மூலம் ஸ்ரீலங்காவை கையாள வேண்டும், மற்றும் அதேவேளை தமிழ் நாட்டில் பெருகிவரும் எதிர்ப்பை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு பிராந்திய சக்தி என்கிற வகையில் இத்தகைய பொறுப்புகளை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்க முடியாது, ஏனெனில் அது எங்கள் அயலவரின் துயரங்களுடன் சேர்த்து எங்கள் இரட்டைத் தன்மையை அம்பலப் படுத்துவதுடன் எங்கள் நிலையையும் அரித்துவிடுகிறது. நாங்கள் எங்கள் அதிகாரத்தை பயன்படுத்தாவிட்டால் நாங்கள் அதிகாரமற்றவர்களாகவே காட்சியளிப்போம்.

(இந்த கட்டுரை எழுத்தாளர் ஒரு முன்னாள் வெளியுறவுச் செயலாளர்)

(நன்றி: இந்தியா ருடே)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக