வியாழன், 4 ஏப்ரல், 2013

வடிவேலுவின் ரீஎன்ட்ரி!


கஜ புஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்’! வடிவேலுவின் ரீஎன்ட்ரி! ’மறுபடியும் எப்ப சார் நடிக்க வருவீங்க?’ என்ற கேள்வியோடு வடிவேலுவை திரையில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் அவரது ரசிகர்கள். இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி வடிவேலுவுக்கு ஒரு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. தமிழ் சினிமாவில் தனது அடுத்த என்ட்ரி பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக பல படங்களை நிராகரித்துவிட்டு,  23-ஆம் புலிகேசி ட்ரென்டில் நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருந்தார் வடிவேலு.ராஜா காலத்து நகைச்சுவையான கதாபாத்திரங்களை சல்லடை போட்டுத் தேடி கடைசியில் தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் கதாபாத்திரங்களை வடிவேலுவுக்காக  தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.
இத்திரைப்படத்ற்கு ‘கஜ புஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி படத்தை இயக்கிய யுவராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். 

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும்  இத்திரைப்படத்திற்கு டி.இம்மான் இசையமைக்கிறார். 23-ஆம் புலிகேசி படத்தைப் போலவே இத்திரைப்படத்திலும் வடிவேலு இரட்டைக் வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக