வெள்ளி, 19 ஏப்ரல், 2013

ராசா பதிலடி: மன்மோகன் சிங்கோடு ஆலோசித்த பின்பே முடிவெடுத்தேன்

கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையானது ஏமாற்றத்தை தருவதாகவும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை காப்பாற்றும் வகையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 
 2ஜி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று வரைவு அறிக்கை
தாக்கல் செய்தது. கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ தாக்கல் செய்த அந்த அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் பிரதமர் மற்றும் நிதி மந்திரி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதியற்ற நிறுவனங்களுக்கு நெட்வொர்க் லைசென்சுகள் பெறுவதற்கும் உதவும் வகையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை முன்னாள் தொலைத் தொடர்புத்துறை மந்திரி ராசா மாற்றியிருக்கிறார் என்றும், பிரதமரை அவர் தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆ.ராசா, சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2ஜி வழக்கு தொடர்பாக என்னை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற பலமுறை கடிதங்கள் அனுப்பியும், நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் என்னை விசாரணைக்கு அழைக்கவில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். ஒவ்வொரு முடிவையும் பிரதமருடன் ஆலோசனை நடத்தியபிறகே எடுத்தேன். இதுதொடர்பாக ஜே.பி.சி.க்கு 100 பக்க கடிதத்தை நாளை அனுப்புவேன். 2ஜி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். அமலாக்கத்துறை வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் என்னிடத்தில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது? நான் எடுத்த முடிவுகள் அனைத்தும், பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கூறினார். இதேபோல் பாரதீய ஜனதாவும், இடதுசாரிகளும் இந்த அறிக்கையை ஏற்கவில்லை maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக