திங்கள், 29 ஏப்ரல், 2013

மு.க.முத்து மனைவி புகார்: அறிவுமதி எங்களை துரத்தி விட்டார்

திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.   இவரது மனைவி எம்.சிவகாமசுந்தரி.  இவரது மகன் மு.க.அறிவுநிதி பாடகர்/நடிகர்.
சிவகாமசுந்தரி தனது மகன் அறிவுநிதி மீது சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு கொடுத் துள்ளார்.
அம்மனுவில்,  ‘’என்னுடைய தந்தை பிரபல பின்னணிப்பாடகர்  சிதம்பரம் எஸ்.ஜெயராமன்.   எனது கணவர் மு.க.முத்து.  எனக்கு 65 வயது ஆகிறது.  எனக்கு இரண்டு முறை தலையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.   மேலும் தற்சமயம் நான் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு முடியாத நிலையில் உள்ளேன்.
இந்நிலையில் எனது மகன் மு.க.அறிவுநிதி, அவர் மனைவி பூங்கொடி, அவரது மாமியார் யோகமங்களம் ஆகியோர் என்னிடம் உள்ள பணம் மற்றும் சொத்திற்காக தினமும் மிகுந்த தொல்லை கொடுக்கின்றனர்.
எங்களை ஆள்வைத்து அடித்து எல்லாவற்றையும் அபகரித்து விடுவேன் என்றும் மிரட்டி பயமுறுத்துகிறார்கள். தகாத வார்த்தைகளால் பேசிவருகின்றனர்.  எங்களுக்கு சென்னை கோபாலபுரத்தில் சொந்த வீடு உள்ளது.  சில வருடங்களுக்கு முன் எங்களிடம் தந்திரமாக பேசி அந்த வீட்டை விட்டு என்னை யும், என் கணவரையும் துரத்திவிட்டு, அறிவுநிதி அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அனுப விக்கிறார்.
தற்சமயம் நாங்கள் வீடில்லாமல் கானாத்தூரில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.  இப்படி எங்களுக்கு துரோகம் செய்தது இல்லாமல் தொடர்ந்து மிரட்டி வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.   இதனால் எங்களது மனமும், உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. 
வயதான காலத்தில் எங்களால் இந்த கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  அவரது மிரட்டலால் எங்களுக்கு உயிர் பாதுகாப்பும் இல்லை.  தாங்கள் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோருகிறேன்.
ஆகவே, எனது  மகன் மு.க.அறிவுநிதி, அவர் மனைவி பூங்கொடி, அவரது மாமியார் யோகமங்களம் ஆகி யோரை விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புகார் மனுவை எனது கணவர் மு.க.முத்து சம்மதத்துடன் அளிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக