சோமனூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள்
உள்ளன. 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஒரு விசைத்தறியில்
சராசரியாக தினசரி 70 மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. கடும்
மின்வெட்டால் இது 35 மீட்டராக குறைந்துள்ளது. இந்நிலையில் கோடைக்காலம்
காரணமாக விசைத்தறியில் ஓடக்கூடிய பாவு நூல் கடும் வெப்பத்தின் தாக்கத்தால்
அடிக்கடி அறுபடுவதால், அதை சரி செய்து மீண்டும் ஓட்ட வேண்டியிருக்கிறது.
இதனால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. சராசரியாக ஒரு விசைத்தறியில் தினசரி
20 மீட்டர் மட்டுமே உற்பத்தியாகிறது.
விசைத்தறியில் பணிபுரியக்கூடிய
தொழிலாளருக்கு உற்பத்தி மீட்டர் கணக்கில் கூலி வழங்கப்படுகிறது. ஒரு
மீட்டருக்கு 50 காசு வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளி சராசரியாக 8 முதல் 10
விசைத்தறிகளை இயக்குகிறார். மின்வெட்டிற்கு முன்பு வரை தினசரி ரூ.350 வரை
கூலி பெற்று வந்த தொழிலாளி, மின்வெட்டால் ரூ.175 தான் பெற்றுவந்தார்.
கோடையால் பாவு நூல் அறுபடுவதால் உற்பத்தி குறைவதால் கூலி ரூ.100 ஆக
குறைந்துள்ளது.இதனால் தொழிலாளர்கள் விசைத்தறி பணிக்கு வருவதில் ஆர்வம்
குறைந்துள்ளனர். வேறு வேலைக்கு சென்று வருகின்றனர். பல விசைத்தறிகளுக்கு
அவர்கள் வேலைக்கு வராததால், இயங்காமல் உள்ளது. கோவை, திருப்பூர்
மாவட்டத்தில் சராசரியாக 25 ஆயிரம் விசைத்தறிகள், தொழிலாளர்கள் வராததால்
இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விசைத்தறிகள் அனைத்தும்
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளாகும். தொழிலாளர்கள் வராததால்
விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய முடியாமல், அவர்களும் கூலி பெற முடியாமல்
வருவாய் இழந்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு
தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்பால் வேதனையடைந்துள்ளனர்.tamilmurasu.or
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக