புதன், 3 ஏப்ரல், 2013

அழகிரி ஆதரவாளர்கள் 15 பேருக்கு விளக்கம் கேட்டு ஸ்டாலின் நோட்டீஸ் ! விநாச காலே விபரீதபுத்தி

மதுரை தி.மு.க.-வில் அண்ணன்-தம்பி தகராறு தற்போதைக்கு முடியாது
போலிருக்கிறது. தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தபோது அதை புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் 15 பேருக்கு, கட்சித் தலைமை தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில், மார்ச் 30-ல் நடந்த ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், துணை பொதுச் செயலர் துரைமுருகன் பேசினார். இதில், அழகிரி ஆதரவாளர்கள் பலர் பங்கேற்கவில்லை.
இதையடுத்து நேற்று, “கட்சி தலைமை முறையாக அறிவித்தும், இக்கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?” என விளக்கம் கேட்டு, 15 பேருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.  பேசாம அழகிரி திமுக    ஸ்டாலின் திமுக  கனிமொழி திமுக என்று ஆளுக்கு ஒரு கட்சியா பதிவு பண்ணுங்க சார்    அப்புறம் மூணு பேரும்  கூட்டணிவைச்சுக்கலாம் 

சபைத் தலைவர் இசக்கிமுத்து, நகர் துணை செயலர்கள் உதயகுமார், சிவக்குமார், சின்னம்மாள் உட்பட 15 பேருக்கு, வந்துள்ள கடிதத்தில், “ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு முன், மதுரை தி.மு.க. சார்பில் ஒட்டிய, போஸ்டர்’களில் உங்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. மேலும், கூட்டம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நகர் நிர்வாகிகளால் உங்களது, மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு அழைப்பும் விடுக்கப்பட்டது. இருந்தும், கூட்டத்தை புறக்கணித்துள்ளீர்கள்.
இது என்ன விவகாரம் என்பதை கடிதம் பெற்ற ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ம்ம் விநாச காலே விபரீதபுத்தி
மதுரையில் ‘ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும்’ தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரியிடம், நோட்டீஸ் குறித்த தகவலை நேற்று ஆதரவாளர்கள் தெரிவித்தனர். “இந்த விவகாரத்தை, நாளை (இன்று) கவனிக்கலாம்” என, அண்ணன் கூறிவிட்டார்.
அஞ்சாநெஞ்சர் இன்று என்ன செய்வாரோ! விநாச காலே விபரீதபுத்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக