திங்கள், 18 மார்ச், 2013

திரைப்பட விருதுகள் List பலத்த சர்ச்சையில்

புதுடெல்லி: 2012ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த பிராந்திய மொழி படமாக 'வழக்கு எண் 18/9' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சிறந்த ஒப்பனைக்கான விருதையும் தட்டிச் சென்றது. சிறந்த நடிகராக இந்தி நடிகர் இர்ஃபான் (பான் சிங் தோமர் படத்திற்காக) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பலத்த சர்ச்சையில் சிக்கி வெளிவந்த கமலின் விஸ்வரூபம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. விஸ்வரூபம் படத்திற்கு சிறந்த கலை மற்றும், நடன அமைப்பு ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது.
சங்கர் மகா தேவனுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது. 'கஹானி' படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்திற்கு சிறந்த உடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.

விருதுகள் விவரம் பின்வருமாறு சிறந்த நடிகை : உஷா ஜாதவ்< தேசிய அளவில் சிறந்த படம் : பான் சிங் தோமர்< சிறந்த பொழுதுபோக்கு படம் : விக்கி டோனர் சிறந்த துணை நடிகை : டாலி அலுவாலியா



தெலுங்கில் சிறந்த படம் : ஈகா

சிறந்த வசனகர்த்தா : அஞ்சலி மேனன்

சிறந்த பாடலுக்கான விருது : போலோ நா (சிட்டகாங்)

சிறந்த பாடகிக்கான விருது : சம்ஹிதா

சிறந்த துணை நடிகர் விருது : விக்கி டோனரில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக