செவ்வாய், 26 மார்ச், 2013

ஓபன் ஹார்ட் சர்ஜரி தேவையில்லை! மருத்துவ புரட்சி


இருதயப் பிரச்சனையா? ஓபன் ஹார்ட் சர்ஜரி இல்லாமலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று கோருகிறது.ரத்தக்குழாய்களுக்குள் டியூப்கள் வழியாக சிறுசிறு உபகரணங்களை செலுத்தி இருதய சிகிச்சை செய்யும் முறையே அது!ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற முறையில் தற்போது வெறும் அடைப்பு நீக்கம் மட்டுமே செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும், பழுதடைந்த வால்வ்களை மாற்ற நெஞ்சை பிளக்கவேண்டிய முறைதான் பெரும்பாலும் உள்ளது. தற்போது பைபாஸ் சர்ஜரியே தேவையில்லை எனறு ஒரு நாள் வந்து விடும் என்று இந்த மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கோருகின்றனர் நெஞ்செலும்பு வழியாக கத்தியை வைத்து அறுத்து மார்பை திறந்து செய்யும் முறைக்கு விரைவில் குட்பை என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள் இதுவல்லாமல் ஒரு டியூப் வழியாக நெம்பி, திருகி சிகிச்சை சாத்தியமாம்! முன்பு சிக்கலில்லாத இருதய ரத்த நாளங்களில் அடைப்புப் பிரச்சனை இருதய துடிப்பு பிரச்சனைகள் மட்டும் இம்மாதிரி சிகிச்சை பெற்று வந்தது.ஆனால் சில நோயாளிகளுக்கு இருதய வால்வ் பிரச்சனையையே இத்தகைய முறை கொண்டு தீர்த்து வருகின்றனர். இருதயத்தில் ஓட்டையை கூட இது போன்ற சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு வரப்படுகிறதாம்!
மருத்துவர்கள் தற்போது இந்த புதிய முறைப்படி உயர் ரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்களாம்.கால் வழியாக கதீட்டர் ஒன்றை நுழைப்பது அல்லது கைகள் வழியாக நுழைப்பது" என்கிறார் இந்தத் துறையின் நிபுணரான அட்லாண்டாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்பென்சர் கிங்.இந்த சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் நோயாளிகள் வீட்டிற்கு சென்று விடுகின்றனராம். ஓபன் ஹார்ட் சர்ஜரிக்குப் பிறகு காயம் ஆறுவதற்கே நாட்களாகும் அது வரை ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியதுதான் ஆனால் இதில் அந்தத் துன்பம் இல்லை வலியும் இல்லை.வயது இருதய நோயாளிகளுக்குக் கூட இந்த முறை வொர்க் ஆகும் என்கிறார் டாக்டர் கிங்.இருதய அறுவை சிகிச்சையில் இந்த புதிய அணுகுமுறை நிச்சயம் சிறப்பான முடிவுகளை அளிக்கும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு மருத்துவரான டாக்டர் ஹேட்லி வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.லடச்சக்கணக்கானோருக்கு ஹார்ட் வால்வ்கள் சரியாக இருப்பதில்லை. அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு பைபாஸ் சர்ஜரி நடைபெறுகிறது. இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய வால்வில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. வால்வ் மாற்று அறுவை சிகிச்சை இன்றி இவர்களில் பாதிபேர் மரணமடைகின்றனர்.

இப்போது மருத்துவரின் கத்தியின்றி கதீட்டர் மூலம் அந்த வால்வையே மாற்ற முடியும். அதுதான் இந்த வெற்றியின் ரகசியம். 76 வயது முதியவர் ஒருவருக்கு எழுந்து பெட்ரூமிலிருந்து பாத்ரூமுக்குக் கூட போக முடியாத இருதயப்பிரச்சனை இருந்தது. இத்தனைக்கும் இவருக்கு 1988ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது இந்த புதிய உபகரணங்களைக் கொண்டு கதீட்டர் மூலம் வால்வ் மாற்றப்பட்டுள்ளது. அதாவது புதிய வால்வ் கத்தியின்றி ரத்தமின்றி மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவு உடனடியாக தெரிந்தது என்று கூறியுள்ளார் அந்த நோயாளி. இப்போது 3 மைல்கள் நடக்கிறாராம்.

மேலும் சிலருக்கு இருதயச் சுவரில் ஓட்டை இருக்கும். இதனால் அளவுக்கு அதிகமான ரத்த ஓட்டம் இருக்கும். இப்போது கதீட்டர் வழியாக ஒரு சிந்தடிக் பேட்சை (Patch) செலுத்தி அந்த ஓட்டையை மூட முடிகிறதாம்!

இப்போது பலூன் தெரபி, அல்லது ஆஞ்ஜியோ பிளாஸ்டி என்ற முறையில் அடைப்பை எடுக்கும் சிகிச்சை பிரபலமாகியுள்ளது. உனக்கு காது குத்தியாச்சோ? என்பது போன்று தற்போது ஆஞ்சியோ பிளாஸ்டி ஆயிடுத்தா? என்று கேட்கும் அளவுக்கு இந்த பலூன் தெரபி புகழ் அடைந்துள்ளது.

ஆனால் இது ஒரு சிறிய இருதய பிரச்சனையை அறிமுக மட்டத்திலேயே களைவதாகும் மேலும் சிக்கலான இருதய் அடைப்பு பிரச்சனைகளுக்கு நெஞ்சை திறந்து செய்யும் அறுவை சிகிச்சைதான் பெரும்பாலும் நடைபெறும். தற்போது இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரி தேவையில்லை என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிக் கூச்சலிடுகின்றனர்.இதற்கு எவ்வளவு செலவாகும்? என்று தெரியவில்லை. ரிஸ்க் என்னன்ன என்பதும் முழுதும் வெளிவரவில்லை. ஆனாலும் இது நிச்சயம் ஒரு புரட்சிதான்.  >பைபாஸ் சர்ஜரிக்கு டாட்டா என்றால் உலகத்தில் இருதய நோயாளிகளுக்கு எவ்வளவு பெரிய ரிலீஃப்! tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக