சனி, 30 மார்ச், 2013

குஜராத்: மோடி ஆட்சியின் லட்சணம் பாரீர்!

குஜராத்தில், 1,000 கிராமங்களில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறதாம்.
மேலும், 3,000 கிராமங்களில், போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என, குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டசபையில், மாநில வருவாய்த் துறை அமைச்சர், ஆனந்தி படேல் கூறியதாவது:
பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிவதற்காக, மாநிலத் தில், 10 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 1,000 கிராமங்களில், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவது தெரிய வந்துள்ளது. இங்கு, குடிப்பதற்கும், பயன்படுத்துவதற் கும், விவசாயத்துக் கும், தண்ணீர் இல்லை.
அதேபோல், மேலும், 3,000 கிரா மங்களிலும், தண் ணீர் பற்றாக்குறை உள்ளது. இங்கு, ஓரளவுக்கு தண்ணீர் கிடைத்தாலும், அவை மக்கள் பயன் பாட்டுக்கு போதுமானதாக இல்லை. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களிடம், விரிவான அறிக்கை தரும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அரசுக்கு கிடைத்ததும். அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பணிகள் அறிவிக்கப்படும். - இவ்வாறு ஆனந்தி படேல் கூறினார்.
இதற்கிடையில், குஜராத் சட்டசபையில், இந்த தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என, நேற்று எதிர்க்கட்சியான, காங்., உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதை, பேரவைத் தலைவர் ஏற்க மறுத்ததை அடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். உடன், அனைத்து காங்., உறுப்பினர்களும், ஒரு நாள் மட்டும், இடைநீக்கம் செய்யப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக