புதன், 20 மார்ச், 2013

அதிமுக வில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சேர்ந்தார் ! நாஞ்சில் சம்பத் upset

இது போன்ற செய்திகள் எதிர்காலத்தில் வரக்கூடும்
பிரபல காபரெட் சாமியாரும் பலநாட்டு (multinational) ஆசிரம வியாபாரியுமான  டபுள் ஸ்ரீ DMK  வை காட்டமாக விமர்சித்து உள்ளார் . அதாங்க இலங்கை தமிழர்கள் விடயத்தில் தி மு க சரியாக செயல் படல்லியாம் ? இவர் இப்படி நாஞ்சில் சம்பத்தின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்துவிட்டார்  
நஞ்சிலோ பாவம் வைகோவிடம் இருந்து ஒரு மாதிரி தப்பி இப்பத்தான் பெரிய பெரிய சூட்கேசுகளையும் இநோவாவையும் ரசித்து கொண்டிருக்கிறார் 
இது பொறுக்காம பங்குக்கு இப்ப டபுள் ஸ்ரீ வருவது சரியில்ல என்பது நடு நிலையாளர்கள் கருத்தாகும். இது போன்ற செய்திகள் எதிர்காலத்தில் வரக்கூடும் இனி உண்மை செய்தியை வாசிங்கள் :
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் திமுக ஆடுவது நாடகம்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்,, அடேங்கப்பா போட்டானே ஒரு போடு 
இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க., நாடகமாடுவதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய அவர், தனது ஆட்சிக் காலத்தில் தி.மு.க., நேர்மையாக நடந்திருந்தால், தமிழர்களுக்கு எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் தங்கள் குடும்பத்தினருக்காக சொத்து சேர்க்கும் பணியில் அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். தி.மு.க. தனது கையில் பட்ட கறையை அழிக்க முடியாது. முதலைக்கண்ணீர் வடிக்கும் தி.மு.க.,வின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். மேலும், இந்திய நாட்டில் உள்ள தமிழர்களும் இலங்கை வாழ் மக்களும் திமுகவின் சந்தர்ப்பவாத நாடகத்தை புரிந்து கொள்ளக் கூடியவர்களே. எனவே இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே இலங்கைத் தமிழருக்கு நல்லது செய்பவர்களாக இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்க முடியும். அதிகாரத்தில் இருந்தபோது, தம் குடும்பச் சண்டைகளிலும், சொத்து சேர்ப்பதிலுமே குறியாக இருந்தார்கள். இப்போது கைகழுவி விடுவதும், முதலக்கண்ணீர் வடிப்பதும் சரியல்ல என்று கூறினார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். மேலும், 'வன்முறையில் இறங்காதீர்கள். தமிழர்களுக்குத் தகுந்த குணம் அதுவல்ல” என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக