புதன், 20 மார்ச், 2013

ஓரினச்சேர்க்கைக்கு டார்ச்சர் : வாலிபர் கழுத்து நெரித்து கொலை ; தற்கொலைக்கு முயன்ற நண்பர் கைது


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஜோலார்பேட்டை-: ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்தவர் சங்கர் (எ) சரவணன் (25), பெங்களூரில் ஒரு தனியார் லாட்ஜ் ஊழியர். அதே லாட்ஜில் பெங்களூரை சேர்ந்த பிரபாகரனும் (22) வேலை பார்த்தார். இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். நட்பாக பழகிய இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிரபாகரன், சங்கருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சங்கர், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் வேடியப்பன் கோயில் பகுதியில் உள்ள சித்தி கோவிந்தம்மாள் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். நானும் வருகிறேன் என்று கூறிய பிரபாகரன், கடந்த 11ம் தேதி சங்கருடன் ஜோலார்பேட்டை வந்தார். இந்நிலையில், நேற்று சங்கரின் சித்தப்பா சின்னதுரை, சித்தி கோவிந்தம்மாள் ஆகியோர், நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சங்கரும், பிரபாகரனும் தனியாக இருந்தனர்.
அப்போது பிரபாகரன் சங்கரை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தினார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் சங்கர். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், பிரபாகரனை தாக்கி கீழே தள்ளினார். பின்னர், பிரபாகரனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நண்பனை கொன்று விட்டோமே என வருந்திய சங்கர், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டுக்கு வந்த கோவிந்தம்மாள், தூக்கில் தொங்கியபடி சங்கர் உயிருக்கு போராடுவதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், சங்கரை தூக்கில் இருந்து கீழே இறக்கி காப்பாற்றினர். அப்போது, வீட்டின் ஒரு பகுதியில் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து, கோவிந்தம்மாள் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சங்கரிடம் விசாரித்தபோது நடந்த சம்பவம் தெரியவந்தது. ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக