வியாழன், 14 மார்ச், 2013

அன்பே சிவம் மாதிரியான படங்களை இனி இயக்கமாட்டேன்” - சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படம் என்று ரசிகர்களால் இன்றும் பாராட்டப்படும் திரைப்படம் ‘அன்பே சிவம்’. கமல்ஹாசனின் கதை நல்ல முறையில் இயக்கி, கதைக்கருவை சிறிதும் குலைக்காமல் கொடுத்திருந்தார் சுந்தர்.சி. இன்று எவ்வளவு பாராட்டப்பட்டாலும் அன்பே சிவம் வெளிவந்த போது படுதோல்வி அடைந்தது.சுந்தர்.சி-க்கு சம்பள பாக்கி, தயாரிப்பாளருக்கு நஷ்டம் என பல சங்கடங்களை ஏற்படுத்தியது அன்பே சிவம். சுந்தர்.சி அன்பே சிவம் மாதிரி மறுபடியும் ஒரு படம் கொடுப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு வாரப்பத்திரைக்கு அளித்துள்ள பெட்டியில் சுந்தர்.சி “ அன்பே சிவம் மாதிரி இன்னொரு படமா? சான்ஸே இல்ல.அன்பே சிவம் படம் எடுத்தபின் ஒரு வருடம் வீட்டில் சும்மா உட்காந்திருந்தது மாதிரி மறுபடியும் என்னால சும்மா உட்கார முடியாது. கமல் நடிப்பு நல்லா இருந்துது, அன்பே சிவம் நல்ல கதைனு டி.வில பார்த்துட்டு சொல்றவங்களுக்காக ஒருத்தன் வாழ்க்கையை அடமானம் வச்சு படம் எடுக்க முடியாது.  பேங் அக்கவுண்ட் பிளாக் பண்ணி, பணமே இல்லாம எத்தனை நாள் கஷ்டப்பட்டேன் தெரியுமா.இன்னைக்கு படத்தை காவியம்னு சொல்லும் போது கோவம் தான் வருது.மக்களுக்கு தேவையானது கமெர்ஷியல் காமெடி சப்ஜெக்ட். அதை நல்லபடியா கொடுத்தா போதும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக