புதன், 6 மார்ச், 2013

ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்!

ஒரு சட்டை அல்லது ஜீன்ஸ் பேண்ட் வாங்கினால் அதே போன்று மற்றொன்று இலவசம் என அறிவிப்பு தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் மூலம் வியாபாரமும் அதிக அளவில் நடக்கிறது.குஜராத்தில் அது போன்ற வியாபார யுத்தியில் ஒரு கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஒரு கார் வாங்கினால் அதே கம்பெனியின் மற்றொரு கார் இலவசம் என அறிவித்துள்ளது. “ரேபிட் சேடான்” கார் ஒன்று வாங்கினால் “பேபியா” கார் ஒன்று இலவசமாக வழங்கப்படும் என “ஸ்கோடா” கம்பெனி டீலர் உறுதி அளித்துள்ளார்.இது 5 ஆண்டுகள் அதாவது 2018 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார் விற்பனை மந்தமானதை தொடர்ந்து இது போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கார் கம்பெனிகள் வெளியிட்டுள்ளனர்.“வோல்ஸ் வாஜென்” நிறுவனம் அதிரடி சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி ஏற்கனவே வைத்துள்ள பழைய காரை விற்று விட்டு “வென்டோ சேடான்” கார் வாங்கினால் உடனடியாக அதற்குரிய மீதி பணம் தர தேவையில்லை. ஒரு ரூபாய் மட்டுமே கொடுத்தால் போதும்.அதன் பின்னர் ஏழு வருடத்துக்கு மீதி பணம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக முழு பணமாகவோ, 36 தவணைகளாகவோ அதை கட்டலாம்.இந்த சலுகை திட்டம் வந்த பிறகு 600 கார்களை விற்றுள்ளதாக குஜராத்தின் “ஸ்கோடா” நிறுவன டீலர் தெரிவித்துள்ளார்.<இதற்கிடையே, “வோல்கவா ஜென்” நிறுவனம் மற்றொரு புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி “வென்டோ” கார் வாங்கினால் முதலில் அதற்குரிய 50 தசவீதம் பணம் மட்டுமே செலுத்தினால் போதும். மீதி பணத்தை ஒரு ஆண்டுகளுக்கு பிறகு செலுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக