புதன், 6 மார்ச், 2013

கேரள நாட்டிளம் பெண்களுடனே‘

பூ‘, ‘களவாணி‘ போன்ற படங்களுக்கு இசை அமைத்ததுடன் ‘தேனீர் விடுதி‘ என்ற படத்தை தயாரித்து இயக்கிய எஸ்.எஸ்.குமரன் அடுத்து ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே‘ என்ற படத்தை எழுதி, இசை அமைத்து தயாரிப்பதுடன் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மணந்தால் கேரளத்து பெண்ணை மணக்க வேண்டும் என்று எண்ணுகிறார் ஞான சம்பந்தம். அது முடியாமல் போக தமிழ் பெண்ணை மணக்கிறார். ஆனாலும் தனது பழக்க வழக்கங்களை கேரள கலாச்சாரப்படியே அமைத்துக் கொள்கிறார். மனைவி ரேணுகாவோ தமிழ் கலாச்சாரப்படி குடும்பம் நடத்துகிறார். இந்நிலையில் தனக்கு பிறக்கும் பிள்ளைக்கும் கேரளா கலாச்சாரத்தின் அருமை பெருமைகளை சொல்லி வளர்ப்பதுடன் கேரள பெண்ணையே மணக்க வேண்டும் என்று ஞானசம்பந்தன் வலியுறுத்துகிறார். மகனை தமிழ் கலாச்சாரப்படி வளர்க்க முயல்கிறார் ரேணுகா. இவர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியை காமெடியாக சொல்கிறது கதை. அபி ஹீரோ. காயத்ரி, அபிராமி, தீட்சிதா ஹீரோயின். வசனம் கோபி. ஒளிப்பதிவு யுவராஜ். பாடல்கள் வைரமுத்து. இதன் ஷூட்டிங் ஒத்தப்பாலம், எர்ணாகுளம், தொடுபுழா, கொல்லம், ஆலப்புழா என 90 சதவீதம் கேரளாவில் நடந்துள்ளது. இவ்வாறு குமரன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக