வியாழன், 7 மார்ச், 2013

மணிரத்னம் இயக்கும் லஜ்ஜோ

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், பலவித நெருக்கடிகளையும் மணிரத்னத்திற்கு ஏற்படுத்திவிட்டது. வழக்கமாக தனது ஒவ்வொரு படத்திற்கும் அதிக இடைவெளி விட்டு பொறுமையாக அடுத்த படைப்பை துவங்கும் மணிரத்னம், கடல் படம் ரிலீஸான ஒரு மாதத்திற்குள் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன் இந்தி நடிகர் ஆமிர்கானை வைத்து இயக்கவிருந்த ‘லஜ்ஜோ’ கதையை கையிலெடுத்துக்கொண்டு மும்பை பறந்திருக்கிறாராம் மணிரத்னம். லஜ்ஜோ திரைப்படத்தின் கதை காதலை மையமாகக் கொண்டது மட்டுமல்லாமல், இந்திய நாடு சுதந்திரமடைவதற்கு முந்தைய காலத்தை கதைக்களமாகக் கொண்டது. அனுராக் கஷ்யப்புடன் இணைந்து படத்தின் அடுத்தகட்ட பணிகளை துவங்கிய போது சில காரணங்களால் இத்திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. >பிரபல உருது எழுத்தாளர் இஸ்மட் சுகாதியின் வாழ்க்கையை அடிபப்டையாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டதால், அந்த கதைக்கான ரைட்ஸ் வாங்குவதில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இந்த கதை அப்போது கிடப்பில் போடப்பட்டதாம்.
 இத்தனை வருடங்களும் மற்ற படங்களில் கவனத்தை செலுத்தினாலும், இந்த கதை சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்த முடிச்சுகளையும் ஒவ்வொன்றாக அவிழ்த்துக்கொண்டிருந்த மணிரத்னம், இப்போது லஜ்ஜோ திரைப்படத்தை இயக்க தயாராக இருக்கிறாராம். இவ்வளவு வேகமாக மணிரத்னம் செயல்படுவது, அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக