செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

இத்தாலி ஹெலிகாப்டர் ஊழல் former Air chief Shashi P Tyagi..CBI names

சோனியா, மன்மோகன் சிங் உட்பட வி.வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் விவகாரம் தொடர்பாக, இத்தாலி சென்ற அதிகாரிகள் குழுவுக்கு, சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆவணங்களில் விசாரணையைத் தொடங்க போதுமான முகாந்திரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் பேர முறைகேடு புகார் தொடர்பாக இத்தாலி சென்ற இந்தக் குழுவில், சி.பி.ஐ., பாதுகாப்பு அமைச்சு, மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் உள்ளனர். விமானப்படை கொள்முதல் மேலாளர் அருண்குமார் பால் இந்தக் குழுவுடன் இத்தாலி சென்றிருந்தார்.
இவ்வழக்கு தொடர்பான சில ஆவணங்களை இத்தாலிய அதிகாரிகளிடம் இருந்து அதிகாரிகள் பெற்றுள்ளனர். அந்த ஆவணங்கள் சி.பி.ஐ.-யிடம் தற்போது உள்ளன. இன்னும் இரு தினங்களில் முதல் கட்ட விசாரணை தொடங்கவுள்ளது.

தற்போது, சில ஆவணங்களை மட்டும் கொடுத்துள்ளனர் இத்தாலிய அதிகாரிகள். காரணம், அவர்களுடைய சொந்த விசாரணைகள் இன்னமும் முடியவில்லை. தங்களின் விசாரணை முடிந்த பிறகு இதர ஆவணங்களைத் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
சி.பி.ஐ. தரப்பில் இருந்து இத்தாலி சென்ற 2 அதிகாரிகளில் ஒருவர் மட்டும் சில ஆவணங்களுடன் திரும்பியுள்ளார். மற்றொரு அதிகாரி இன்று திரும்பவுள்ளார். அவர் மற்றைய அதிகாரியுடன் டில்லி திரும்பாமல் இத்தாலியில் தாமதித்ததால், மேலும் சில விபரங்களுடன் வரலாம் என ஊகிக்கப்படுகிறது viruviruppu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக