திங்கள், 11 பிப்ரவரி, 2013

பாலாவின் பரதேசி - வடஇந்தியாவில் வெளியாகிறது!


பாலாவின் 'பரதேசி' திரைப்படம் தமிழில் வெளியாவதோடு வட இந்தியாவிலும் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் பரதேசி படத்தை தனது நிறுவனம் மூலம் வட இந்தியாவில் வெளியிடுகிறார். பாலாவின் நான் கடவுள் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியவர் இயக்குனர் அனுராக். நாங்கள் வட இந்தியாவிலேயே வசித்தாலும், எங்களுக்கு தோன்றாத சிந்தனை பாலாவுக்கு தோன்றியிருக்கிறது. காசியில் எந்த இடத்தில் அவர் கேமராவை வைத்து இந்த காட்சிகளை எடுத்திருப்பார் என்று என்னால் கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை என்று பாலாவை பெருமைப் படுத்தி பேசியவர் இயக்குனர் அனுராக் அதே படத்தில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்று தேசத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் பாலா. சேது படத்தின் மூலம் அறிமுகமான பாலா நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன்  படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். புதுயுக இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பாலா அகில இந்திய அளவில் அனைவராலும் பாராட்டப்படுபவர்.இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படமான பரதேசி தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதர்வா,தன்ஷிகா,வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிர‌காஷ் இசை அமைத்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களை இதில் பாலா தனக்கே உரிய கலைநயத்தோடு பதிவு செய்திருக்கிறார்.விரைவில் இந்த படம் வெளியாகிறது.இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இந்த படத்தால் கவரப்பட்டு இதனை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் வெளியிட உள்ளார். ஆங்கில மற்றும் இந்தி மொழி சப் டைடில்களோடு 'பரதேசி' படத்தை தனது பேன்டம் பிலிம்ஸ் லிட் மூலம் அவர் வெளியிடுகிறார்.<அனுராக் காஷ்யப் 'பிளேக் பிரைடே','தேவ் டி' உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர். அவரது சமீபத்திய படமாக 'காங்ஸ் ஆப் வாஸ்யபர்' அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பாலாவின் 'பரதேசி' படத்தை வட இந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அதனை அங்கு வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக