வியாழன், 14 பிப்ரவரி, 2013

டெல்லி போலீசார் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கவில்லை முதல்வர் ஷீலா தீட்சித்

புதுடெல்லி: டெல்லி போலீசார் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கவில்லை. டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த நீங்கள் தலையிட வேண்டும் என பிரதமர் மன்மோ கன் சிங்குக்கு முதல்வர் ஷீலா தீட்சித் கடிதம் எழுதி உள்ளார். டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மாணவி 6 பேர் கும்ப லால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் அவர் இறந்தார். இதையடுத்து பெரியளவில் போராட்டங்கள் நடந்தன. இந்த சம்பவத்துக்கு  பிறகும் டெல்லி போலீசார் செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லை என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லியில் பலாத்கார சம்பவத்தால் பெரியளவில் போராட்டங்கள் நடந்தன.
அதன்பிறகும் டெல்லி போலீசார் செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் தெரியவி ல்லை. டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். ஆனால் முன்பு போலவே நிலைமை உள்ளது. இந்த மாத  தொடக்கத்தில் கூட லஜ்பத் நகரில் நடந்த பலாத்கார முயற்சியில் கல்லூரி மாணவி கடுமையாக தாக்கப்பட்டார். அவரது வாயில் கம்பியால் குத்தப்பட்டுள்ளது.  டெல்லி போலீசுக்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் நடந்தும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. எனவே இந்த பிரச்னையில் நீங்கள் தலையிட  வேண்டும். நகரில் பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக உள்துறை  அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவுக்கும் ஷீலா கடிதம் எழுதி உள்ளார். tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக