வியாழன், 14 பிப்ரவரி, 2013

பெண்கள் மீதான வன்முறை இந்தியாவில்தான் அதிகம்

 ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்
அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்:  மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?
  • தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2011ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிராக 2,28,650 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் மட்டும் 24,260.
  • 1971-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2011 வரையிலான நாற்பதாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் 873 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வல்லுறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதவீதத்தினர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.
  • இந்தியாவின் 53 பெருநகரங்களை ஒப்பிடும் போது தலைநகரான டெல்லியில்தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவு குற்றங்கள் நடக்கின்றன.
  • ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் நிலவும் மிக மோசமான நாடுகளில் உலகில் 4-வது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் தாம்சன்-ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது.
  • தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது.
  • தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. இவற்றில் 834 பாலியல் வல்லுறவுக் குற்றங்களாகும்.
  • தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.
  • இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்திலும் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு வரதட்சிணை சாவு நடக்கிறது. பெண்கள் மீதான வன்முறை குற்றங்களாக பதிவாகியுள்ள 93,000 வழக்குகள் இன்னமும் விசாரணைக்கே வரவில்லை. vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக