ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

"அட்டாக்' பாண்டிக்கு வலை பொட்டு சுரேஷ் கொலை


திண்டுக்கல் : மதுரையில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளருமான, பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோர்ட்டில் நேற்று, ஏழு பேர் சரணடைந்தனர். மதுரை தி.மு.க., பிரமுகரான, "அட்டாக்' பாண்டிக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.
மதுரை டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ், 46. ஜன., 31 இரவு, 8:00 மணிக்கு, தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.கொலை தொடர் பாக சந்தேகத்தின் பேரில், முன்னாள் வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் அட்டாக் பாண்டி ஆதரவாளர்களான சபா, சந்தானம் உட்பட பலரை, போலீசார் தேடி வந்தனர்.நேற்று காலை, 10:40 மணிக்கு, நத்தம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ஆனந்தன் முன், மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த சபா என்ற சபா ரத்தினம், 25, சந்தானம், 24, ராஜா என்ற ஆசா முருகன், 24, லிங்கம், 25, சேகர், 24, செந்தில், 24, கார்த்திக், 24, சரணடைந்தனர்."மதுரை சுப்ரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷனில், எங்கள் மீது வழக்கு பதிவு செய்து, எங்கள் வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர். எங்கள் பெற்றோர் அச்சுறுத்தப்படுகின்றனர். இதனால் நாங்கள் சரணடைந்துள்ளோம்' என்று, கோர்ட்டில் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக