ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

சென்னை ஐஸ்அவுஸ் வீரபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 17). பிளஸ்-2  மாணவர்.நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கோபாலகிருஷ்ணன் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஐஸ்அவுஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசிங் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். கோபாலகிருஷ்ணன், இயற்பியல் ரெக்கார்ட் நோட்டை சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம்  சமர்ப்பிக்காமல் இருந்துள்ளார். இவரைப் போல  14 மாணவர்களும் ரெக்கார்டு நோட்டு படிப்பை முடிக்காமல் இருந்துள்ளனர். இவர்களை  ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே மாணவர் கோபாலகிருஷ்ணனை ஆசிரியர் அடித்ததாகவும்,  அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்ததாகவும், மற்ற மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக