செவ்வாய், 29 ஜனவரி, 2013

Kiran Bedi :நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்

பாலியல் வன்முறைகளை தடுக்க, கிரிமினல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டி சமீபத்தில் தனது பரிந்துரைகளை அளித்தது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு வந்திருந்த கிரண்பேடி, இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒரு ராணுவ வீரரோ அல்லது ஒரு போலீஸ்காரரோ, சீருடையில் இருக்கும் ஒரு மனிதன் பாலியல் பலாத்காரம் செய்வாரேயானால், அவர் ராணுவ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படக் கூடாது. சிவில் சட்டத்தின் கீழ் தான் வழக்கு நடத்தப்பட வேண்டும்.
அதற்காக, சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நேரம் வந்து விட்டது. அப்படி செய்தால் தான் அவர்கள் (சீருடையில் இருப்பவர்) அழிப்பவர்களாக இல்லாமல், பாதுகாப்பவர்களாக இருப்பர். இந்த விஷயத்தில் நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். பரிந்துரைகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளன. இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக