ஞாயிறு, 27 ஜனவரி, 2013

காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம் எனக்கு தேவையில்லை: பின்னணி பாடகி ஜானகி

பாலக்காடு :""காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, "பத்ம பூஷன்' விருதை, ஏற்கப் போவது இல்லை,'' என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி, அதிரடியாக அறிவித்துள்ளார்.பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 75. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், "சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே... நெஞ்சினிலே' உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.தேசிய அளவில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, நான்கு முறை பெற்றிருந்தாலும், பத்ம விருதுகளை, இதுவரை, மத்திய அரசு தனக்கு கொடுக்கவில்லையே என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசு, நேற்று முன்தினம் இரவு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, பத்ம விருதுகளை அறிவித்தது.இதில், பின்னணி பாடகி, ஜானகிக்கும், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
  ஜானகி அம்மாவின் துணிச்சல் பாராட்டுக்கு உரியதே.. ஜானகி அம்மா விருதினை வாங்கமல் தமிழகத்தின் சுய கவுரவத்தை காப்பாற்றும் துணிச்சல் பாராட்டுக்குரியது.. நடிகர் திலகம் சிவாஜிக்கு எப்போது விருது கிடைத்தது.. விருதுக்காக காத்திருப்பவர் கலைஞர் அல்ல.. விருதினை மறுப்பது சரியான முடிவே.. ஜானகி அம்மாவிற்கு பாராட்டுக்கள்.. என்றும் நீங்காத எங்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் உங்கள் குரலோசை...

இந்நிலையில், கேரள மாநிலம், ஒட்டப்பாலத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஜானகி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த, 55 ஆண்டுகளாக, திரைத் துறையில், புகழ் பெற்ற பாடகியாக இருந்தேன்; ஆனாலும், மத்திய அரசு, என்னை அங்கீகரிக்கவில்லை. நான் பாடிய அனைத்து பாடல்களுமே, அந்தந்த மாநில ரசிகர்களால், பெரிதும் ரசிக்கப்பட்டன.என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், மலையாள வார்த்தை உச்சரிப்பு, சரியாக இருப்பதாக, பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இவ்வளவு காலம் தாழ்த்தி, எனக்கு கிடைத்துள்ள கவுரவத்தை ஏற்க, எனக்கு மனம் வரவில்லை. பத்ம பூஷன் விருதை ஏற்க போவது இல்லை.

அதற்காக, மத்திய அரசு மீது, எனக்கு எந்த கோபமும் இல்லை; அரசு, தவறு செய்துவிட்டதாகவும் கருதவில்லை. ஆனாலும், விருதை வாங்கப் போவது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன்.இவ்வாறு ஜானகி கூறினார்.

ஜானகியின், மகன் முரளி கிருஷ்ணா கூறுகையில்,""என் தாயாருக்கு, காலம் தாழ்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது. இதை எப்படி ஏற்பது? விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை கூட, அரசு சார்பில், யாரும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை; மற்றவர்கள் கூறித் தான், தெரிந்தது,'' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக