ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம்: இயக்குநர் அமீர் அறிக்கை “நீங்கள் யாரும் இப்போது வாய் திறக்க வேண்டாம்”

amir-20130126-1விஸ்வரூபம் தொடர்பில் திரைத்துறையை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், டைரக்டர் அமீர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவர் இஸ்லாமியர் என்பது ஒருபுறம் இருக்க, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும் அவர்தான்.
இதோ, அவரது அறிக்கையும் வந்துவிட்டது. ரஜினி, பார்த்திபன் என நடிகர்களும் (அஜித் விடுத்த அறிக்கை விஸ்வரூபம் தொடர்பானதா, குடியரசு தின செய்தியா, அல்லது எதற்கோ ஏற்பட்ட கோபமா என்று புரியவில்லை) இயக்குனர் பாரதிராஜாவும், ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், திரைப்படத் துறையைச் சேர்ந்த யாரும், தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அமீர்.
அப்படியானால், அவர் அபிப்பிராயம் தெரிவிக்கப் போகிறாரா? நீதிபதியின் அபிப்பிராயத்தை பார்த்துவிட்டு, அதன்பின் தடை ஏற்படாவிட்டால் டிக்கெட் எடுத்து படத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு, தெரிவிக்கவுள்ளார். இதோ, அவரது அறிக்கை: viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக