வியாழன், 31 ஜனவரி, 2013

மும்பை செல்கிறார் கமல் விஸ்வரூபம் தொடர்பாக

சென்னை: விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக மும்பை செல்ல உள்ளதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மும்பை சென்று வெற்றியுடன் திரும்பி வருவேன் என்று ரசிகர்களுக்கு கமல் தகவல் கூறியுள்ளார். ரசிகர்கள் அமைதிகாக்குமாறும் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஸ்வரூபம் படம் இந்தியில் பிப்ரவரி 1ம் தேதி மும்பையில் வெளியாக உள்ளது.தமது விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்களுக்காக யார் மீதும் கோபம் இல்லை என்றும் வருத்தம் தான் என்றும் நடிகர் கமலஹாசன் மீண்டும் விளக்கமளித்துள்ளார். நியாயத்திற்காக தாம் போராடி வருவதாகவும் ரசிகர்கள் ஆத்திரப்படாமல் அமைதி காக்குமாறும் கமல் வலியுறுத்தியுள்ளார். முஸ்லீம்கள் உட்பட தமது ரசிகர்கள் அனைவரும் தம்முடனே உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் குறித்து தமது முஸ்லீம் ரசிகர்கள் மற்றும் இதர இஸ்லாமிய நண்பர்கள் தம்முடன் பேசி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இனிதான் வரவேண்டி உள்ளதாக கூறியுள்ளார்.


இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடனும் தாம் தொடர்ந்து பேசி வருவதாக கமல் தகவல் அளித்துள்ளார். மேலும் பேசிய கமல் தமக்கும், தமது ரசிகர்களுக்கும், இஸ்லாமிய நண்பர்களுக்கும் சமுதாய கடமை இருப்பதாகவும் கூறியுள்ளார். மோதல் என்ற வதந்திகளை பொய்யாக்குமாறும் இது வெறும் சினிமாதான் யாரும் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்றும் கமல் அறிவுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக