திங்கள், 28 ஜனவரி, 2013

பா.ம.க ரவுடித்தனம் !! வீடியோ !!!

னைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் ஆதிக்க சாதி சங்கங்களை கூட்டி சாதி வெறியைத் தூண்டி வரும் பாமக தலைவர் ராமதாசை கண்டித்து போராடுபவர்கள் மீது பாட்டாளி மக்கள் கட்சியினர் போலீஸ் துணையுடன் ரவுடித் தனத்தை அவிழ்த்து விடுகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2013) சென்னை  தியாகராய நகர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழக அமைப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் காரர்களும் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி ராமதாசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கூட்டத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தும்,  மண்டபத்திலிருந்து பா.ம.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் வெளியில் வந்து எதிர் கோஷம் போட்டனர்; கற்களை வீசித் தாக்கினர். வன்முறையில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர், அவர்களது தலைவர் ராமதாஸ் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஆர்ப்பாட்டம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்ற வாரம் சனிக் கிழமை (ஜனவரி 19ம் தேதி)  நாமக்கல் நகரில் திருச்சங்கோடு-நாமக்கல் சாலைக்கு அருகில் நடைபெற்ற அனைத்து சமுதாய கூட்டத்துக்கு வெளியே தமிழ் புலிகள் என்ற தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அப்போது அங்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை ஆபாசமாக திட்டியபடியே தடிக் கம்புகளுடன் அடிக்க பாய்ந்தனர். கல்வீசி தாக்கினர். பா.ம.க இளைஞரணியின் மாநில செயலாளர் இரா.அருள் தலைமையில் இந்த ரவுடிக் கூட்டம் நடத்திய வன்முறையை தடுக்க முடியாத போலீஸ் அவர்கள் கையில் காலில் விழுந்து சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். ராமதாசை எதிர்ப்பவர்கள் ஜனநாயக முறையில்தான் தமது எதிர்ப்பை காண்பிக்கின்றனர். ஆனால் பா.ம.க சாதி வெறியர்களோ எல்லா இடத்திலும் ரவுடிகள் போன்று நடந்து கொள்கின்றனர். எனில் உண்மையில் இவர்கள் தலித் மக்களை எப்படி நடத்துவார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை.
ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட தலித் அமைப்பினர் 7 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வீடியோவில் பா.ம.க ரவுடிகள் எப்படி நடக்கின்றனர் என்பதை கண்டு சினமடையுங்கள்! vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக