வியாழன், 31 ஜனவரி, 2013

மீண்டும் தடை! விஸ்வரூபத்திற்கு' ஐகோர்ட்

சென்னை: நடிகர் கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்து சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது."விஸ்வரூபம்' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வெங்கட்ராமன், "விஸ்வரூபம் படத்திற்கு, தமிழக அரசு விதித்திருந்த, இரண்டு வார தடை நீக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் படத்தை திரையிட, எந்தத் தடையும் இல்லை' என, நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவுக்கு, தடை கேட்டு, நேற்று முன் தினம் நள்ளிரவு, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், வீட்டுக்கு சென்று வாதிட்டார். ஆனால், மறு நாள் (நேற்று) காலையில் மேல்முறையீடு தாக்க செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
 அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், நேற்று காலை, தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் முறையிட்டார்.அப்போது, "இது அவசர வழக்கு அல்ல' என்று குறிப்பிட்ட தற்காலிக நீதிபதி, விசாரணையை, பிற்பகல், 2:15 மணிக்கு, தள்ளி வைத்தார். பிற்பகல், துவங்கிய விசாரணை, ஒரு மணி நேரம் விவாதம் நடந்தது.அரசு தரப்பில், அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன்,"ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர் வாதிட்டனர்.

அட்வகேட் - ஜெனரல் வாதிட்டதாவது:விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து, ஒவ்வொரு தியேட்டருக்கும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து, தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தவறான உத்தரவு. தியேட்டர்களுக்கு தான், 144 தடை தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அல்ல. இந்த தடை உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில், தியேட்டர் உரிமையாளர்கள் தான், கோர்ட்டை அணுகியிருக்க வேண்டும்.ஆனால், அப்படி இல்லாமல், பாதிக்கப்படாத சினிமா தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதல்ல. தடை உத்தரவை எதிர்த்து, அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. இதற்கு கோர்ட்டை நாடியிருக்க கூடாது. தடை உத்தரவில் மாற்றங்கள், திருத்தங்கள் அல்லது உத்தரவை திரும்ப பெறுவது போன்ற கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அல்லது போலீஸ் கமிஷனரிடம் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரு தரப்பின் விவாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் அளித்த தீர்ப்பு:விஸ்வரூபம் திரைப்படத்திற்கு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த வழக்கில், பிப்., 4ம் தேதி, தமிழக அரசின் அட்வகேட்-ஜெனரல், பதில் மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை, தனி நீதிபதி, பிப்., 6ம் தேதி முடித்து வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தீர்ப்பில் கூறினர்.இந்த தீர்ப்பை அடுத்து, விஸ்வரூபம் சினிமாவுக்கு அரசின் தடை தொடர்கிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக