திங்கள், 17 டிசம்பர், 2012

Tasmac டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு

மதுரை:"மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும்,' பா.ம.க.,வின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு, நேற்றிரவு முதல், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இரவு 7 மணி முதலே, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், கடைக்கு வருவோர், ஒருவித பீதியுடன் சென்றனர். சிலர், போலீஸ் சோதனைக்கு பயந்து, "சரக்கு' வாங்காமல், திரும்பிச் சென்றனர். "போராட்டம் நடக்கும் இன்றும், பாதுகாப்பு தொடரும்,' என, போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக