வியாழன், 20 டிசம்பர், 2012

Park Geun-Hye தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர்

தென் கொரியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள பார்க் ஹ்யாங் ஹேயின் தந்தை ஒரு இராணுவச்சதிப் புரட்சியில் ஆட்சியை பிடித்த பிறகு 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தார். அவரது தந்தையும் முன்னாள் சர்வாதிகாரியுமான பார்க் யுங் ஹீ 1979 ஆம் ஆண்டு சுட்டிக் கொல்லப்பட்டார். மிகவும் நெருக்கமாக இருந்த போட்டியின் இறுதியில், பார்க் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சியின் வேட்பாளர் மூன் ஜே யின் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 60 வயதாகும் செல்வி பார்க், தற்போது அதிபாராக இருக்கும் லீ ம்யுங் பாக் அவர்களிடமிருந்து பொறுப்பேற்றுக் கொள்வார். நாட்டின் செல்வங்களை அனைவருக்கும் பிரித்தளிக்க பார்க் ஹ்யாங் ஹே உறுதியளித்துள்ளார். நாட்டில் ஒரு புதிய தேசிய மகிழ்ச்சிக்கான சகாப்தம் தொடங்கியுள்ளது என்று தனது வெற்றிக்கு பிறகு, ஆதரவாளர்களிடையே பேசும் போது பார்க் அவர்கள் கூறினார். தற்போது வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளிலும், இராணுவத் தலைவர்களின் வாரிசுகளே நாட்டை ஆளும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக