புதன், 19 டிசம்பர், 2012

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

ஷிண்டே அவசர ஆலோசனை புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து புதுடெல்லியில் மேற் கொள்?ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.இதனிடையே இந்த வழக்கில் இது வரை சேகரித்த விவரங்களை உயர் நீதிமன்றத்திற்கு அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இரண்டு தினங்களுக்கு முன்பு ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப் பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.  தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது பொலீஸ்தரப்பு இதை வலியுறுத்துகிறது . ஆனால் பல போலீஸ் நிலையங்களிலேயே கற்பழிப்புகளும் நடந்துள்ளது  பெண்களுக்கு எதிரான வன்முறையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என மக்கள் கருதுவதால் மரண தண்டனை சட்டம் விரைவில் வரக்கூடிய சாத்தியம் உள்ளது . நேற்று  பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு  காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு சென்றார்.
மாணவியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் தேசிய அவமானம் என்றும், இதில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் புதுடெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் புதுடெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் ஷிண்டே இன்று புதுடெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். சம்பவம் நடைபெற்ற பேருந்தின் கண்ணாடிகள் உள்ளே இருப்பது தெரியாத வண்ணம் வர்ணம் பூசப்பட்டதுடன், திரைச்சீலையும் போடப்பட்டு இருந்தது. ஆகவே இனி பஸ்கள் அனைத்திலும் இத்தகைய வர்ணம் பூசப்பட்ட கண்ணாடிகளை அகற்றவும், திரைச்சீலைகளை அகற்றும்படி உத்தரவிடவும் முடிவு செய்யப்பட்டது.

பஸ்களை டிரைவர்கள் குடியிருக்கும் பகுதியில் நிறுத்தும் பஸ்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.  பள்ளி பேருந்துகளை ஓட்டும் டிரைவர்கள் பட்டியலை அளிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் டிரைவர்களின் செல்போன் எண்கள் மற்றும் லைசென்ஸ் எண்கள் ஆகியவற்றை பேருந்துகளில் எழுத வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த பிரச்சனையை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.  இதுவரை சேகரித்த விவரங்களை நீதிமன்றத்திற்கு அளிக்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிக உயர்ந்த சிகிச்சை அளிக்கும்படி கேட் டுக்கொண்டுள்ளது.  அந்த மாணவி ஓடும் பஸ்சில் 40 நிமிடம் கற்பழிக்கப்பட்டபோது, அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக