செவ்வாய், 18 டிசம்பர், 2012

ஓட்டலில் குடிபோதையில் ரகளையில் திருச்சி சிவா MP மகன் உதயநிதி ரசிகர் மன்ற சூர்யா

ஓட்டலில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திமுக எம்.பி., மகன் சரணடைந்தார் திருச்சி கண்டோண்மென்ட் பகுதியை சேர்ந்தவர்,திருச்சி  சிவா.  தி.மு.க.,வைச் சேர்ந்த  ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறார். இவரது மகன் சூர்யா, 20, என்பவர், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத்தில், மாவட்ட நிர்வாகியாக உள்ளார். சூர்யாவும், அவரது நண்பர்கள் நால்வரும், திருச்சி கண்டோண்மென்ட் பகுதியில் உள்ள சங்கம் ஓட்டலில், கடந்த, 3ம் தேதி மாலை நடந்த மது விருந்தில் பங்கேற்றனர். "உற்சாகம்' தலைக்கேறிய நிலையில், சூர்யாவுக்கும், பார் ஊழியர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள், பார் ஊழியர்களை சரமாரியாக தாக்கி, ரகளையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, ஓட்டல் செக்யூரிட்டி மேலாளர் நவாஸ், திருச்சி நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட ஐந்து பேர் மீது, ஆபாசமாக பேசுதல், சட்ட விரோதமாக கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுகாயங்களை ஏற்படுத்துதல் ஆகிய, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகிய, ஐந்து பேரையும் தேடினர். எம்.பி., சிவாவின் மகன் சூர்யா, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் பெற்றார். திருச்சி, ஜே.எம்., 2, நீதிபதி, ராஜேந்திரன் முன்னிலையில், நேற்று முறைப்படி சரணடைந்து, ஜாமின் பெற்றார். மற்ற நால்வரை, போலீசார் தேடுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக